மூட்டுவலி, முதுகுவலி நிமிடத்தில் குணமாகும்.. இதை தடவினால்!

0
229
#image_title

மூட்டுவலி, முதுகுவலி நிமிடத்தில் குணமாகும்.. இதை தடவினால்!

மூட்டுவலி, முதுகுவலி விரைவில் குணமாக கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வழிகளை பின்பற்றவும்.

மூலிகை எண்ணெய் தயாரிக்க தேவைப்படும் பொருட்கள்…

*சுக்கு – 5 கிராம்
*முடக்கத்தான் கீரை -25 கிராம்
*பச்சை கற்பூரம் – 1 துண்டு
*தேங்காய் எண்ணெய் – 200 மில்லி

செய்முறை…

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 200 மில்லி தேங்காய் எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும். பின்னர் அதில் 5 கிராம் அளவு சுக்கு சேர்த்து நன்கு பொரிய விடவும்.

பிறகு 25 கிராம் முடக்கத்தான் கீரையை அதில் போட்டு மிதமான தீயில் நன்கு காய்ச்சவும். பின்னர் 1 துண்டு பச்சைக் கற்பூரம் போட்டு காய்ச்சி அடுப்பை அணைத்து விடவும்.

பின்னர் எண்ணெயை ஆறவிட்டு மூட்டு, முதுகு, கை, கால் ஆகிய பகுதிகளில் வலி தடவி வர அனைத்து வலிகளும் பறந்து விடும்.

மற்றொரு தீர்வு:-

தேவைப்படும் பொருட்கள்:-
*எலுமிச்சை சாறு – தேவையான அளவு
*சுக்கு – 1 துண்டு

செய்முறை…

மிக்ஸி ஜாரில் 1 துண்டு சுக்கு மற்றும் எலுமிச்சை சாறை சேர்த்து அரைத்து பேஸ்டாக்கி கொள்ளவும்.

இந்த பேஸ்ட்டை இரவு தூங்கச் செல்வதற்கு முன்னர் மூட்டு, முதுகு பகுதியில் வலி உள்ள இடத்தில் தடவி படுக்கவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வர நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.