பொங்கல் தொகுப்புடன் ரூ.1000 வழங்கப்படும் – தமிழக அரசு அறிவிப்பு! யாருக்கு கிடைக்காது?

0
290
#image_title

பொங்கல் தொகுப்புடன் ரூ.1000 வழங்கப்படும் – தமிழக அரசு அறிவிப்பு! யாருக்கு கிடைக்காது?

தமிழகம் முழுவதும் வருகின்ற ஜனவரி 14 ஆம் தேதி பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட இருக்கின்றது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆண்டுதோறும் பரிசுத் தொகுப்பு வழங்குவது வழக்கம்.

அந்த வகையில் இந்த ஆண்டு 1 கிலோ சர்க்கரை, 1 கிலோ பச்சரிசி மற்றும் 1 முழு கரும்பு பொங்கல் பரிசுத் தொகுப்பாக வழங்கப்படும் என்று கடந்த இரு தினங்களுக்கு முன் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

மேலும் பொங்கல் தொகுப்புடன் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவசமாக வேட்டி, சேலைகள் வழங்கப்படும் என்றும் இதற்காக 1 கோடியே 63 லட்சம் வேட்டிகள் நெசவாளர்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு இருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த பொங்கல் தொகுப்பு ஏமாற்றத்தை அளிக்கிறது. பொங்கல் தொகுப்புடன் ரூ.1000 ரொக்கம் வழங்க வேண்டுமென்று பல்வேறு தரப்பினர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்த வரும் நிலையில் இது குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கின்றது.

அதாவது இந்த பொங்கலுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள பொங்கல் தொகுப்புடன் ரூ.1000 ரொக்கம் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டலின் அவர்கள் தற்பொழுது தெரிவித்து இருக்கின்றார்.

இந்த 1000 ரூபாய் வருமான வரி செலுத்துபவர்கள், அரசு வேலையில் இருப்பவர்கள் மற்றும் சர்க்கரை அட்டை வைத்திருப்பவர்களுக்கு வழங்கப்படாது என்று அரசு தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டு இருக்கின்றது.

Previous articleKB சுந்தராம்பாள் நடித்து 16 பாடலை பாடி மாபெரும் வெற்றி பெற்ற படம் பற்றி தெரியுமா?
Next articleகாளிகாம்பாள் கோயிலில் திகைத்து நின்று டிஎம்எஸ்! “உள்ளம் உருகுதய்யா” பாடல் உருவான கதை