இவ்வாறு செய்தால் கிட்னியில் 1000 கல் இருந்தாலும்.. அனைத்தும் கரைந்து வெளியேறி விடும்!
நம் உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது மிகவும் முக்கியம் ஆகும். முக்கிய உறுப்புகளில் ஒன்றான சிறுநீரகத்தில் கல் உருவாகாமல், தொற்றுகள் ஏற்படாமல் இருக்க நாம் சில ஆரோக்கிய வழிகளை பின்பற்ற வேண்டும்.
சிறுநீரகத்தில் கல் உருவாக உடலுக்கு தேவையான தண்ணீர் இல்லாமை, நாள்பட்ட வயிற்றுப் போக்கு, உயர் இரத்த சர்க்கரை, சிறுநீரக தொற்று ஆகியவை பொதுவான காரணங்களாக சொல்லப்படுகிறது.
சிறுநீர் கழிக்கும் போது வலி ஏற்பட்டாலோ, இளஞ்சிவப்பு, சிவப்பு அல்லது பழுப்பு நிறத்தில் சிறுநீர் வெளியேறினாலோ அவை கிட்னியில் ஸ்டோன் ஏற்பட்டு இருக்கிறது என்பதை நமக்கு காட்டும் அறிகுறி ஆகும்.
தேவையான பொருட்கள்:-
*முள்ளங்கி
*வாழைத்தண்டு
*எலுமிச்சை சாறு
*தூள் உப்பு
செய்முறை:-
முதலில் பாதி முள்ளங்கியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். அடுத்து சிறிதளவு வாழைத்தண்டு எடுத்து அதையும் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
இதை இரண்டையும் மிக்ஸி ஜாரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ளவும். பின்னர் இதை ஒரு டம்ளருக்கு வடிகட்டி 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் சிட்டிகை அளவு உப்பு சேர்த்து கலந்து பருகவும்.
இதை காலை உணவிற்கு முன்பு குடிப்பது நல்லது. இவ்வாறு செய்வதன் மூலம் கிட்னியில் உள்ள கற்கள் அனைத்தும் கரைந்து சிறுநீர் வழியாக வெளியேறி விடும்.