தலைமுடி கருகருனு நீளமாக வளர இந்த ஒரு சீரம் பயன்படுத்துங்கள்!

Photo of author

By Divya

தலைமுடி கருகருனு நீளமாக வளர இந்த ஒரு சீரம் பயன்படுத்துங்கள்!

Divya

தலைமுடி கருகருனு நீளமாக வளர இந்த ஒரு சீரம் பயன்படுத்துங்கள்!

தலை முடி பராமரிப்பு என்பது மிகவும் அவசியம் ஆகும். பணிச்சுமை காரணத்தால் பலரும் தங்களது தலை முடியை கவனிக்க தவறுகின்றனர். இதனால் சத்து குறைபாடு ஏற்பட்டு அதிகளவில் முடி கொட்ட தொடங்கி விடுகிறது.

முடியை சரியாக பராமரிக்காமல் விட்டால் விரைவில் வயதான தோற்றத்தை அனைவரும் பெற நேரிடும். எனவே இந்த பாதிப்புகளை எல்லாம் சந்திக்க கூடாது என்றால் தலை முடியை கவனிக்க என்ன செய்ய வேண்டுமே அதை எல்லாம் கட்டாயம் செய்து வர வேண்டும்.

தேவையான பொருட்கள்:-

*செம்பருத்தி பூ(இதழ்) – 1 கைப்பிடி அளவு

*வெட்டிவேர் பொடி – 1/2 தேக்கரண்டி

*கற்றாழை ஜெல் – 1/2 தேக்கரண்டி

*வைட்டமின் ஈ கேப்ஸ்யூல் – 1

செய்முறை…

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 கப் தண்ணீர் ஊற்றி செம்பருத்தி பூ சேர்த்து சில நிமிடங்கள் கொதிக்க விடவும். பின்னர் அடுப்பை அணைத்து வெட்டிவேர் போட்டுவிட்டு ஊற விடவும்.

செம்பருத்தி பூ மற்றும் வெட்டி வேர் நன்கு ஊறி வந்த பின்னர் 1/2 தேக்கரண்டி கற்றாழை ஜெல் மற்றும் 1 வைட்டமின் ஈ சேர்த்து கலந்து ஒரு பாட்டிலில் ஊற்றி சேமிக்கவும்.

இந்த சீரம் கூந்தல் வளர்ச்சிக்கு உகந்தவை ஆகும். தலைமுடி கருகருனு வளர தினமும் இந்த சீரம் சிறிதளவு தலைக்கு தேய்த்து 1 மணி நேரம் வரை ஊறவிட்டு பின்னர் முடியை நன்கு அலசிக் கொள்ளவும்.

இந்த சீரம் முற்றிலும் இயற்கையானது என்பதினால் எந்த ஒரு பக்க விளைவுகளும் இதனால் ஏற்படாது.