ஆன்லைன் மூலம் ரேசன் கார்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

0
160
#image_title

ஆன்லைன் மூலம் ரேசன் கார்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

தற்பொழுது ரேசன் கார்டு மூலம் பல அரசு நலத் திட்டங்கள் கிடைத்து வருவதால் புதிதாக திருமணம் ஆனவர்கள், கூட்டு குடும்பத்தில் இருப்பவர்கள் என்று பலரும் புதிதாக ரேசன் கார்டு பெற ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர்.

ரேசன் கடைகள் மூலம் குறைந்த விலைக்கு பருப்பு, சர்க்கரை, எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் கிடைப்பதினாலும் மாதம் ஒன்றுக்கு புதிதாக ரேசன் அட்டை பெற நாடு முழுவதும் கிட்டத்தட்ட 50000 பேர் வரை விண்ணப்பித்து வருகின்றனர்.

இந்த ரேசன் அட்டை பெற இ- சேவை மையம் மூலமும், தாலுக்கா ஆபீஸ் மூலமும் விண்ணப்பம் செய்து வரும் நிலையில் இதை இன்னும் சுலபமாக்கும் விதமாக வீட்டிலேயே ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ள முடியும்.

ரேசன் கார்டு பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்வது எப்படி?

ஸ்டெப் 01:

https://www.tnpds.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்கு செல்லவும்.அதில் ஸ்மார்ட் கார்டு என்ற ஆப்ஷனைக் கிளிக் செய்யவும்.

ஸ்டெப் 02:

ரேசன் கார்டு பெறுவதற்கான விண்ணப்பம் கொடுக்கப்பட்டு இருக்கும். அதில் கேட்கப்பட்டுள்ளவற்றை பூர்த்தியிட்டு ஆதார், பான் கார்டு, யார் பெயரில் விண்ணப்பம் செய்கிறீர்களோ அவர்களது புகைப்படம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்றவும்.

ஸ்டெப் 03:

உங்கள் குடும்ப நபர்கள் குறித்த விவரம், எரிவாயு இணைப்பு குறித்த விவரத்தை பதிவு செய்து அனைத்தும் முடிந்த பின்னர் ஓகே என்ற பட்டனை கிளிக் செய்யவும்.

இதனை தொடர்ந்து உங்களுக்கு ஒரு reference எண் அனுப்பப்பட்டு இருக்கும். இந்த reference எண் இருந்தால் தான் புதிய ரேசன் கார்டு பெற முடியும். எனவே அதை சேவ் செய்து வைத்துக் கொள்ளவும்.

ஸ்டெப் 04:

உங்கள் விண்ணப்பம் மற்றும் ஆவணம் சரிபார்க்கப்பட்டு உங்களுக்கு கொடுக்கப்பட்ட reference எண்ணை அலுவலர்கள் கேட்பார்கள். அவை உறுதியான பின்னர் 15 நாட்களில் தபால் மூலம் உங்களுடைய ரேசன் கார்டு அனுப்பி வைக்கப்படும்.