நாம் செய்யும் இந்த தவறுகள் சிறுநீர்ப்பாதை தொற்றுக்கு வழிவகுக்கும்!
1)உடலுக்கு தேவையான நீர் அருந்தாமல் இருந்தால் சிறுநீர் அளவு குறைவாக இருக்கும். இதனால் அதில் அதிகளவு கிருமிகள், பாக்டீரியாக்கள் சிறுநீரில் தேங்க வாய்ப்பு இருக்கின்றது. இதனால் சிறுநீர் பாதையில் தொற்று ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கின்றது.
2)கழிப்பறையை சுத்தமாக வைத்துக் கொள்வது மிகவும் முக்கியம் ஆகும். கழிப்பறை சுத்தம் இல்லாமல் இருந்தால் அதை பயன்படுத்தும் பொழுது நமக்கு சிறுநீரகம் தொடர்பான தொற்று ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கின்றது.
3)உடலுக்கு இறுக்கமான உடைகளை அணிவதை பழக்கப்படுத்தி கொண்டால் சிறுநீர் தொற்று ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
4)உடலில் வைட்டமின் சி குறைபாடு ஏற்பட்டால் சிறுநீர்பாதையில் தொற்று ஏற்படும்.
5)சிறுநீர் கழித்த பின்னர் பிறப்புறுப்பை தண்ணீர் கொண்டு முறையாக சுத்தம் செய்யத் தவறினால் நோய் தொற்று ஏற்படும். அதேபோல் மலம் கழித்த பின்னர் ஆசனவாய் பகுதியை முழுவதும் சுத்தம் செய்ய வேண்டும்.
6)நீண்ட நேரம் சிறுநீர் கழிக்காமல் அடக்கி வைத்திருந்தால் சிறுநீர் பாதையில் தொற்று ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது.
7)சுகாதாரமற்ற உடலுறவால் சிறுநீர்ப் பாதையில் தொற்று ஏற்பட வாய்ப்பு அதிகம்.
8)நீரிழிவு பாதிப்பு இருந்தால் சிறுநீரகப் பாதையில் நோய் ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது.