படர்தாமரைக்கு காரணங்களும்.. அதற்கான தீர்வுகளும்..!
உடலில் அதிகளவு வியர்வை சுரக்கும் பகுதிகளில் பூஞ்சை உருவாகி அவை படர்தாமரையாக உருவெடுத்து விடுகிறது. இந்த பாதிப்பு பெண்களை விட ஆண்களுக்கு தான் அதிகம் ஏற்படுகிறது.
உடலுக்கு தேவையான காற்றோட்டம் இல்லாமல் உடை அணிவதினால் இது போன்ற பாதிப்புகள் அதிகம் ஏற்படுகிறது.
அளவுக்கு மீறி உடலில் வியர்வை சுரக்கும் பகுதிகளான அக்குள், தொடை, கை – கால் இடுக்கு, தோள்ப்பட்டை ஆகிய பகுதிகளில் படர்தாமரை அதிகம் உருவாகிறது.
இதனால் அரிப்பு, எரிச்சல் போன்ற உணர்வுகள் ஏற்பட்டு பொது இடங்களில் பல வித தொந்தரவுகளை சந்திக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுகிறோம்.
இந்த படர்தாமரை நீங்க மருத்துவரை நாட வேண்டிய அவசியம் இல்லை. வீட்டில் உள்ள பொருட்களை வைத்து குணப்படுத்திக் கொள்ள முடியும்.
*வேப்பிலை
*தேங்காய் எண்ணெய்
*கற்பூரம்
3 கொத்து வேப்பிலையை 1 கிளாஸ் அளவு நீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி கொள்ளவும். இந்த நீரை ஆற வைத்து படர்தாமரை மீது ஊற்றி காய விடவும்.
பின்னர் 3 ஸ்பூன் தேங்காய் எண்ணெயில் 1 அல்லது 2 கற்பூரத்தை போட்டு கரைத்து படர்தாமரை உள்ள இடத்தில் அப்ளை செய்யவும். இவ்வாறு செய்வதினால் படர்தாமரையில் உள்ள கிருமிகள் அளிக்கப்பட்டு புண்கள் விரைவில் ஆறும்.