இப்படி செய்தால் காய்ந்த பூக்கள் கூட கமகம சாம்பிராணியாக மாறும்!

0
243
#image_title

இப்படி செய்தால் காய்ந்த பூக்கள் கூட கமகம சாம்பிராணியாக மாறும்!

பூஜைக்கு பயன்படுத்தும் சாம்பிராணியை கடையில் வாங்காமல் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து எவ்வாறு தயார் செய்யலாம் என்பது குறித்த தெளிவான செய்முறை விளக்கம் கொடுக்கப்பட்டு இருக்கின்றது.

சாம்பிராணி செய்ய தேவைப்படும் பொருட்கள்…

*காய்ந்த மலர்கள்
*வெட்டிவேர்
*பச்சை கற்பூரம்
*ரோஸ் வாட்டர்
*சந்தன பவுடர்
*நெய்
*இலவங்கம்
*ஏலக்காய்

சாம்பிராணி செய்யும் முறை…

முதலில் பூஜைக்கு பயன்படுத்திய மலர்கள், வெற்றிலை ஆகியவற்றை ஈரமில்லாமல் காயவைத்துக் கொள்ளவும்.

பின்னர் இதை மிக்ஸி ஜாரில் போட்டு சிறிதளவு வெட்டிவேர் சேர்த்து சேர்த்து பொடியாக்கி கொள்ளவும்.

இந்த பொடியை ஒரு தட்டிற்கு மாற்றிவிடவும். அடுத்து மிக்ஸி ஜாரில் தேவையான அளவு ஏலக்காய், இலவங்கம் மற்றும் பச்சைக்கற்பூரம் சேர்த்து பொடித்துக் கொள்ளவும். இதையும் ஏற்கனவே அரைத்து வைத்துள்ள பொடிகளுடன் சேர்த்து கலந்து கொள்ளவும்.

பின்னர் சிறிதளவு சந்தன பொடி, நெய் சேர்த்து பிசைந்து கொள்ளவும். அடுத்து சிறிது ரோஸ் வாட்டர் சேர்த்து பக்குவமாக பிசைந்து கூம்பு வடிவத்திற்கு பிடித்து காயவைத்துக் கொள்ளவும்.

சாம்பிராணி காய குறைந்தது 15 நிமிடங்கள் ஆகும். இவை நான்கு காய்ந்து வந்த பின்னர் ஒரு டப்பாவில் போட்டு சேமித்து வழக்கம் போல் பூஜை அறையில் வைத்து பயன்படுத்தலாம்.

இந்த சாம்பிராணி இயற்கை பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்டவை. இதனால் வீடு முழுக்க இயற்கை நறுமணம் மட்டுமே வீசும்.