சளி, இருமல், காய்ச்சல், தலைவலி.. ஒரே கசாயம் தான்.. கண் இமைக்கும் நேரதத்தில் காணமல் போய்விடும்!

0
192
#image_title

சளி, இருமல், காய்ச்சல், தலைவலி.. ஒரே கசாயம் தான்.. கண் இமைக்கும் நேரதத்தில் காணமல் போய்விடும்!

மழைக்காலம் முடிந்து தற்பொழுது குளிர்காலம் தொடங்கி விட்டது. மழையோ, குளிரோ.. எந்த காலமாக இருந்தாலும் சளி, இருமல் பாதிப்பு வருவது எளிதான ஒன்று தான்.

இந்த பாதிப்பை கவனிக்க தவறும் போது தலைவலி, காய்ச்சல் ஏற்பட்டு விடுறது. இந்த பாதிப்புகள் அனைத்தையும் செலவின்றி குணமாக்க கசாயம் செய்து குடிங்கள்.

*துளசி பொடி
*மஞ்சள்
*திப்பிலி பொடி
*சுக்கு பொடி
*தண்ணீர்

கசாயம்: செய்முறை விளக்கம்..

1)பாத்திரத்தில் 200 மில்லி தண்ணீர் ஊற்றி சூடேற்றவும்.

2)அடுத்து துளசி பொடி 1/4 தேக்கரண்டி, திப்பிலி பொடி 1/4 தேக்கரண்டி சேர்த்து கலந்து விடவும்.

3)திப்பிலி பொடி 1/4 தேக்கரண்டி, சுக்கு பொடி 1/4 தேக்கரண்டிக்கும் குறைவாக சேர்த்து குறைவான தீயில் கொதிக்க விடவும்.

4)இறுதியாக மஞ்சள் தூள் சிட்டிகை அளவு சேர்த்து கொதிக்க வைக்கவும்.

இதை ஒரு கிளாஸுக்கு வடித்து குடிக்கவும். இந்த கசாயம் சளி, இருமல், காய்ச்சல், தலைவலியை குணமாக்கும்.

*ஓமம்
*மிளகு
*தேன்
*இஞ்சி

1)ஒரு பாத்திரத்தில் 1 கிளாஸ் தண்ணீர் ஊற்றி 1/2 தேக்கரண்டி ஓமம், 1/2 தேக்கரண்டி மிளகு(இடித்தது) சேர்த்து கொதிக்க விடவும்.

2)அடுத்து ஒரு துண்டு இஞ்சியை தோல் நீக்கி தட்டி அதில் சேர்த்து கொதிக்க விட்டு வடிகட்டி கொள்ளவும்.

3)பிறகு 1 ஸ்பூன் தேன் கலந்து இளஞ்சூட்டில் அருந்தவும். இவை சளியால் ஏற்படும் அனைத்து வித பாதிப்புகளையும் குணமாக்கும்.