கை கால் பாத வீக்கத்தை குணமாக்க.. இந்த கசாயம் 1 கிளாஸ் குடிங்க!

Photo of author

By Divya

கை கால் பாத வீக்கத்தை குணமாக்க.. இந்த கசாயம் 1 கிளாஸ் குடிங்க!

உடலில் தேவையற்ற கழிவுகள் தேங்கி விட்டால் கை, கால், பாதத்தில் வீக்கம் ஏற்படத் தொடங்கும். இந்த பாதிப்பு குணமாகாமல் இருக்கும் பட்சத்தில் கை, கால் மறுத்து போதல், கடுமையான கை, கால் வலி ஏற்படும்.

இந்த கை, கால் வீக்க பாதிப்பு எதனால் ஏற்படுகிறது என்றால்…

சிறுநீரக கல் அடைப்பு
கல்லீரல் அடைப்பு
சதை அடைப்பு
உடல் பருமன் ஆகிய காரணங்களால் ஏற்படுகிறது.

கை, கால். பாதிப்பு வீக்கத்தை குணமாக்கும் இயற்கை வைத்தியம்…

*அருகம்புல் பொடி
*சீரகம்

கை கால் பாத வீக்கத்தை குணமாக்கும் பவர்புல் கசாயம்…

ஒரு கைப்பிடி அளவு அருகம்புல்லை வெயிலில் காயவைத்து பொடி செய்து கொள்ளவும். முடியாதவர்கள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்க கூடிய அருகம்புல் பொடியை வாங்கிக் கொள்ளவும்.

அடுப்பில் பாத்திரம் வைத்து அதில் 1 கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும். பிறகு அருகம்புல் பொடி 1 ஸ்பூன் அளவு சேர்க்கவும்.

பிறகு 1 ஸ்பூன் சீரகம் சேர்த்து நன்கு காய்ச்சவும். 1 கிளாஸ் நீர் 1/2 கிளாஸாக வந்த பின்னர் அடுப்பை அணைத்து விடவும்.

இந்த கசாயத்தை ஒரு கிளாஸுக்கு வடிகட்டி காலை உணவிற்கு முன்பு பருகவும்.

கை கால் பாத வீக்கம் குணமாக்க மற்றொரு தீர்வு…

*நீர்முள்ளி விதை
*சிறு நெருஞ்சில்முள் பொடி

அடுப்பில் பாத்திரம் வைத்து 200 மில்லி தண்ணீர் ஊற்றி 1/2 ஸ்பூன் சிறு நெருஞ்சில்முள் பொடி மற்றும் 1/4 ஸ்பூன் அளவு நீர்முள்ளி விதை சேர்த்து கொதிக்க வைக்கவும்.

இதை 1 கிளாஸுக்கு வடிகட்டி காலை மாலை உணவுக்கு முன் பருக வேண்டும்.