எந்த உணவு சாப்பிட்டாலும் ஜீரணம் ஆக நேரம் எடுக்குதா? அப்போ இந்த உருண்டை ஒன்று மட்டும் சாப்பிடுங்க!
உணவில் சைவம், அசைவம் என்று இரு வகைகள் உள்ளது. இதில் எந்த உணவை எடுத்துக் கொண்டாலும் அவை ஜீரணமாகும் உணவாக இருத்தல் வேண்டும்.
ஆனால் முழுமையாக வேகாத உணவு மற்றும் எளிதில் செரிக்காத உணவால் உடலில் செரிமான மண்டலம் பாதிக்கப்பட்டு உணவு அரைப்பட நேரம் எடுத்துக் கொள்கிறது.
இதனால் உடல் மந்தம், மலச்சிக்கல், நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது. இந்த பாதிப்பை சந்திக்க கூடாது என்றால் செரிமான மண்டலத்தை ஆரோக்கியமான முறையில் மேம்படுத்த வேண்டும்.
தேவைப்படும் பொருட்கள்…
*கருப்பட்டி
*இஞ்சி
*நெய்
இஞ்சி என்றால் செரிமானத்திற்கு மருந்து என்ற பொருள் உள்ளது. இதில் உள்ள காரத் தன்மை செரிமான மண்டலத்தை சீர்படுத்த உதவுகிறது. செரிமானக் கோளாறை குணமாக்க இந்த இஞ்சியுடன் நாம் மற்றொரு பொருளை பயன்படுத்த வேண்டும்.
அவை கருப்பட்டி தான். கருப்பட்டி உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொடுக்க கூடிய இனிப்பு பொருள். இவை பனைமரத்தில் இருந்து கிடைக்க கூடியவை.
இந்த இரண்டு பொருட்களையும் வைத்து செரிமான பிரச்சனைக்கு மருந்து தயாரிக்க வேண்டும்.
அடுப்பில் வாணலி வைத்து 1 கப் கருப்பட்டி சேர்த்து வதக்க வேண்டும். பிறகு சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும்.
அடுத்து 1 இஞ்சியை தோல் நீக்கி கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். இந்த விழுதை கொதிக்கும் கருப்பட்டியில் சேர்த்து கலந்து விட வேண்டும்.
கருப்பட்டி + இஞ்சி வெந்து ஹல்வா பதத்திற்கு வந்ததும் சிறிது நெய் விட்டு கிளற வேண்டும்.
பிறகு ஸ்டவ்வை அணைத்து சிறு உருண்டைகளாக பிடித்து காய வைக்கவும். இந்த உருண்டையை காலை மற்றும் இரவு உணவிற்கு பின்னர் சாப்பிடவும்.
இவ்வாறு கருப்பட்டி + இஞ்சி உருண்டையை சாப்பிட்டு வந்தால் செரிமான மண்டலம் சீராகும்.