பாத வலியை மளமளவென போகச் செய்யும் குமட்டிக்காய் வைத்தியம்!

0
234
#image_title

பாத வலியை மளமளவென போகச் செய்யும் குமட்டிக்காய் வைத்தியம்!

அதிக நேரம் நின்று வேலை செய்வது, உடலில் சத்து பற்றாக் குறை, சர்க்கரை நோய் உள்ளிட்ட காரணங்களால் பாத வலி, வீக்கம் ஏற்படுகிறது.

இந்த பாத வலி காலை நேரத்தில் அதிக தொந்தரவை உண்டாக்கும். இரவு நேரத்தில் ஏற்படக் கூடிய பாத வலியால் தூக்கம் கெட்டு நிம்மதியை இழக்க நேரிடும்.

உடலில் இரத்த ஓட்டம் தலை முதல் பாதம் வரை சீரக இயங்க வேண்டும். இல்லையென்றால் பாதத்தில் வீக்கம், வலி, குடைச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

இந்த பாத வலி, வீக்கத்தை குமட்டிக்காய் மூலம் சரி செய்ய இயலும். குமட்டிக்கை வரப்பு ஓரங்களில் வளரக் கூடிய கொடி காய் ஆகும். பார்க்க கிடைத்ததால் குட்டி தர்பூசணி போல் காட்சி தரும்.

இந்த குமட்டிக்காயை வைத்து தான் பாத வலிக்கு தீர்வு காணப் போகின்றோம். கொம்மட்டி, பேய்கும்மட்டி, வரித்தும்மம் என்று வேறு சில பெயர்களாலும் அழைக்கப்படும் இந்த காய் பாத வலி மட்டும் அல்ல முடி உதிர்வு, புழு வெட்டு பாதிப்புக்கும் தீர்வாக இருக்கின்றது.

கும்மட்டி காயை பயன்படுத்தும் முறை…

ஒரு குமட்டிகையை எடுத்துக் கொண்டு அதில் ஒரு இரும்பு கம்பியை குத்திக் கொள்ளவும். பிறகு அடுப்பை பற்ற வைத்து தீயில் இந்த காயை சுட்டுக் கொள்ளவும்.

ஓரளவிற்கு சுட்டால் போதும்… பிறகு இதை இரு பாதியாக அறுத்து பாதங்களில் வலி உள்ள இடத்தை அதன் மீது வைத்து அழுத்தம் கொடுக்கவும்.

இவ்வாறு செய்யும் வாயில் கசப்பு தன்மை ஏற்படும். இதனால் அச்சப்பட வேண்டியதில்லை. வாரம் ஒருமுறை இந்த குமட்டிக்காய் வைத்தியம் செய்து வந்தால் பாத வலிக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.

Previous articleஎலுமிச்சை ஊறுகாய்: கேரளா ஸ்டைலில்.. நாவூறும் சுவையில்..!
Next articleஇந்த திசையில் காலண்டரை மாட்டி வைத்தால் பணம் கோடி கோடியாய் கொட்டும்!