இவ்வாறு செய்தால் 30 நிமிடத்தில் வீட்டில் பதுங்கி ஆட்டம் காட்டிய எலிகளுக்கு டாட்டா தான்!

0
218
#image_title

இவ்வாறு செய்தால் 30 நிமிடத்தில் வீட்டில் பதுங்கி ஆட்டம் காட்டிய எலிகளுக்கு டாட்டா தான்!

எல்லோருடைய வீட்டிலும் இருக்கக் கூடிய ஒரு பொதுவான பிரச்சனை எலி நடமாட்டம். எலி விஷத் தன்மை கொண்ட உயிரினம் என்பதினால் அதனிடம் இருந்து சற்று விலகி இருப்பது நல்லது.

வீட்டில் பதுங்கி அச்சுறுத்தி வரும் இந்த எலிகளின் நடமாட்டத்திற்கு முடிவு கட்ட கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறையை பின்பற்றவும்.

1)தக்காளி
2)மிளகாய் தூள்
3)சர்க்கரை

மீடியம் சைஸில் தக்காளி எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த தக்காளியை இரண்டாக நறுக்க வேண்டும்.

நறுக்கிய பக்கத்தில் இரண்டு பொருட்களை தடவ வேண்டும். அவை மிளகாய் தூள் மற்றும் வெள்ளை சர்க்கரை ஆகும்.

இந்த இரண்டு பொருட்களையும் சம அளவு எடுத்து தக்காளியின் இருபுறமும் தடவி வீட்டில் எந்த இடத்தில் எலிகள் அதிகம் நடமாடுகிறதோ அந்த இடத்தில் இந்த தக்காளியை வைக்க வேண்டும்.

பொதுவாக எலிகள் தக்காளி என்றால் விரும்பி சாப்பிடும். இவ்வாறு தக்காளி வாசனை ஈர்க்கப்பட்டு எலிகள் அதை சாப்பிட்டால் அதில் பூசப்பட்ட மிளகாயின் காரம் எலிகளின் உடலை வீங்கச் செய்துவிடும். பிறகு சிறிது நேரத்தில் எலிகள் இறந்து விடும்.

1)மிளகுத் தூள்
2)நாட்டு சர்க்கரை
3)மாத்திரை தூள்
4)தண்ணீர்

ஒரு கிண்ணத்தில் 1 ஸ்பூன் மிளகுத் தூள், 1 ஸ்பூன் பயன்படுத்தாத மாத்திரை தூள் மற்றும் 1 ஸ்பூன் நாட்டு சர்க்கரை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

அதன் பின்னர் சிறிது தண்ணீர் எடுத்து அதில் சேர்த்து பிசைந்து உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும்.

இந்த உருண்டையை எலி கள் சுற்றி திரியும் இடத்தில் வைத்தால் அதை உண்டு எலிகள் இறந்து விடும்.