உடல் எடை கூட.. உயரம் அதிகரிக்க தினமும் இதை 1 கிளாஸ் குடித்து வாருங்கள்!

0
284
#image_title

உடல் எடை கூட.. உயரம் அதிகரிக்க தினமும் இதை 1 கிளாஸ் குடித்து வாருங்கள்!

எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் எடை அதிகரிக்க மாட்டேங்குது… என்ன செய்தாலும் உடல் உயரம் அதிகரிக்க மாட்டேங்குது… என்று வருத்தப்படும் நபர்கள் ஏராளம்.

பலரின் கிண்டல் பேச்சுக்கு ஆளாகி மனம் வருந்தும் நபர்களுக்கு உரிய தீர்வு எதுவென்று தெரிவதில்லை.

உடல் எடை மாற்றும் உயரத்தை பக்க விளைவுகள் இன்றி ஆரோக்கியமான முறையில் அதிகரிக்க நினைப்பவர்கள் உளுந்து கலவை பானம் அருந்தி வரலாம்.

இதனால் உடல் எடை மற்றும் உயரம் அதிகரிக்கும். உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

தேவையான பொருட்கள்…

*கருப்பு உளுந்து – 1 கப்
*மக்காச்சோளம் – 1 கப்
*தினை – 1 கப்
*ஜவ்வரிசி – 1/2 கப்
*பாதாம் – 1 கப்

செய்முறை…

அடுப்பில் ஒரு வாணலி வைத்து 1 கப் கருப்பு உளுந்து சேர்த்து மிதமான தீயில் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

அதேபோல் மக்காச்சோளம், தினை, ஜவ்வரிசி, பாதாம் ஆகியவற்றை வறுத்து ஆறவிடவும். பிறகு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடி செய்து கொள்ளவும்.

பயன்படுத்தும் முறை…

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1/2 கப் தண்ணீர் ஊற்றி அரைத்த பவுடர் 2 அல்லது 3 ஸ்பூன் அளவு சேர்த்து கலந்து விடவும்.

பிறகு 1/2 டம்ளர் பால் ஊற்றி காய்ச்சவும். பச்சை வாடை நீங்கும் வரை மாவுக் கலவையை காய்ச்சவும்.

பிறகு அதில் தேவையான அளவு நாட்டு சர்க்கரை சேர்த்து காய்ச்சி குடிக்கவும். இந்த பானம் உடல் எடை மற்றும் உயரத்தை ஆரோக்கியமான முறையில் அதிகரிக்க உதவுகிறது.

Previous articleகூந்தல் அடர்த்திக்கு ஹெர்பல் ஷாம்பு – தயார் செய்வது எப்படி?
Next articleவீட்டின் தென்மேற்கு மூலையில் இதை ஒரு கைப்பிடி வைத்தால் பணம் மழை கொட்டுவது உறுதி!