வாயு தொல்லைக்கு எளியத் தீர்வு..! 100% பலன் கொடுக்கும்!
தீர்வு 01:-
ஒரு பாக்கெட் கட்டி பெருங்காயம் எடுத்து சிறு சிறு உருண்டைகளாக பிடித்துக் கொள்ளவும். பிறகு அந்த உருண்டைகள் மீது சிறிது அரிசி மாவு கலந்து சேமித்து கொள்ளவும்.
இந்த பெருங்காய உருண்டையை தினமும் சாப்பிட்டு வந்தால் வாயு பிரச்சனை நீங்கும்.
தீர்வு 02:-
ஒரு பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் இஞ்சி சீவல் மற்றும் ஒரு ஸ்பூன் பூண்டு சீவல் சேர்த்து 250 மில்லி தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்க வேண்டும். இவ்வாறு செய்வதினால் வயிற்றில் அடைபட்டு கிடந்த வாயுக்கள் அகலும்.
தீர்வு 03:-
வயிற்றுப் பகுதியில் விளக்கெண்ணெய் ஊற்றி மஜாஜ் செய்து வந்தால் வாயுத் தொல்லை அகலும்.
தீர்வு 04:-
ஒரு கப் தேங்காய் தண்ணீரில் சிறிது சோம்பு சேர்த்து ஊறவிட்டு குடித்து வந்தால் வாயுத் தொல்லை நீங்கும்.
தீர்வு 05:-
தினமும் ஒரு சிவப்பு கொய்யா பழம் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள கெட்ட வாயுக்கள் நீங்கும்.
தீர்வு 06:-
ஒரு கிளாஸ் வெந்நீரில் ஒரு ஸ்பூன் இலவங்கப் பொடி மற்றும் இந்துப்பு கலந்து குடித்தால் உடலில் உள்ள கெட்ட வாயுக்கள் வெளியேறும்.