கடுமையான வாய் துர்நாற்றத்தை போக்க இதை மட்டும் செய்யுங்கள்!

0
311
#image_title

கடுமையான வாய் துர்நாற்றத்தை போக்க இதை மட்டும் செய்யுங்கள்!

*துளசி

ஒரு கைப்படி அளவு துளசியை மென்று சாப்பிட்டு வந்தால் வாயில் வரும் கெட்டை வாடை குணமாகும்.

*எலுமிச்சை சாறு

ஒரு கிளாஸ் தண்ணீரில் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து வாயை கொப்பளித்தால் வாய் துர்நாற்றம் நீங்கும்.

*தேன் + எலுமிச்சை சாறு

ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 ஸ்பூன் தேன்.. ஆகிய இரண்டையும் கலந்து பற்களில் தேய்த்தால் வாய் துர்நாற்றம் கட்டுப்படும்.

*எலுமிச்சை சாறு + தூள் உப்பு

ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறுடன் சிறிது உப்பு சேர்த்து பற்களில் தேய்த்தால் வாய் துர்நாற்றம் கட்டுப்படும்.

*சோம்பு

ஒரு ஸ்பூன் அளவு சோம்பை வாயில் போட்டு மென்று சாப்பிட்டு வந்தால் வாய் துர்நாற்றம் அகலும்.

*மிளகு + உப்பு + சோம்பு

இந்த மூன்று பொருட்களையும் சம அளவு எடுத்து அரைத்து தண்ணீரில் கலந்து வாயை கொப்பளித்தால் வாய் துர்நாற்றம் அகலும்.

*பெருஞ்சீரகப் பொடி + இந்துப்பு

இந்த இரண்டு பொருட்களையும் சம அளவு எடுத்து அரைத்து பற்களை துலக்கி வந்தால் வாயில் வரும் கெட்டை வாடை நீங்கும்.

*துளசி பொடி + எலுமிச்சை பொடி

துளசி மற்றும் எலுமிச்சை தோலை உலர்த்தி பொடியாக்கி தண்ணீரில் கலந்து வாயை சுத்தம் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

Previous articleதெரிந்து கொள்ளுங்கள்.. 12 ராசிக்காரர்களின் இயல்பு இவை!
Next articleமண் பாத்திரத்தில் சமைத்து சாப்பிட்டால் உடலுக்கு இத்தனை ஆரோக்கிய நன்மைகள் கிடைக்குமா?