இரத்த சோகை குணமாக.. இரத்த செல்களை அதிகரிக்க தினமும் இதை 1 கிளாஸ் குடித்து வாருங்கள்!
இரத்தத்தில் இருக்கின்ற ஹீமோகுளோபின் அளவு குறைந்தால் இரத்த சோகை பாதிப்பு ஏற்படும். இந்த பாதிப்பு ஆண்களை விட பெண்களுக்கு தான் அதிகம் ஏற்படுகிறது என்ற அதிர்ச்சி தகவல் ஆய்வின் மூலம் தெரியவந்து இருக்கின்றது.
உடலில் இரும்பு சத்து குறைபாடு ஏற்பட்டால் இரத்த சோகை பாதிப்பு ஏற்படும். அதுமட்டும் இன்றி கேன்சர், டெங்கு, சர்க்கரை நோய், கல்லீரல் நோய் ஆகியவை இருந்தாலும் இரத்த சோகை ஏற்படும்.
தேவையான பொருட்கள்…
*குப்பைமேனி இலை
(அல்லது) பொடி
*மிளகு
*பசும்பால்
குப்பைமேனி இலை ஒரு கைப்பிடி அளவு எடுத்து காயவைத்து பொடியாக்கி கொள்ளவும். குப்பைமேனி இலை கிடைக்காதவர்கள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்க கூடிய குப்பைமேனி பொடி வாங்கிக் கொள்ளவும்.
அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 200 மில்லி பசும்பால் அல்லது தண்ணீர் ஊற்றி சூடுபடுத்தவும்.
பிறகு அதில் 2 ஸ்பூன் குப்பைமேனி இலை பொடி சேர்த்து கொதிக்க விடவும்.
அடுத்து 4 மிளகை தட்டி அதில் சேர்த்து கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.
இதை ஒரு கிளாஸுக்கு வடிகட்டி குடித்து வர இரத்த சோகை நீங்கி இரத்த உற்பத்தி அதிகரிக்கும்.