சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க உதவும் 4 பொருட்கள் கொண்ட பானம்!
நவீன கால கட்டத்தில் மக்களை பாதிக்கும் நோய்களில் முதல் இடத்தில் இருப்பது சர்க்கரை. இந்த நோய்க்கு இந்தியர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
உயர் இரத்த அழுத்தம், இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் ஏற்படக் கூடிய இந்த சர்க்கரை நோயை குணமாக்க சுண்டைக்காய், நெல்லிக்காய் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்துவது நல்லது.
தேவையான பொருட்கள்…
*சுண்டைக்காய்
*பெரு நெல்லிக்காய்
*பாகற்காய்
*முருங்கை இலை
செய்முறை….
மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் உலர்த்த வேண்டும்.
அதற்கு ஒரு காட்டன் துணி எடுத்து அதில் 1/4 கப் அளவு சுண்டைக்காய், 2 பெரு நெல்லிக்காய் நறுக்கியது, விதை நீக்கிய பாகற்காய் ஒன்று(நறுக்கியது) மற்றும் 1 கப் முருங்கை இலை ஆகியவற்றை கொட்டி நிழலில் உலர்த்திக் கொள்ளவும்.
இதை ஒரு மிக்ஸியில் போட்டு அரைத்து பொடி செய்து பாட்டிலில் கொட்டி சேமித்துக் கொள்ளவும்.
பயன்படுத்தும் முறை…
அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.
அடுத்து அதில் 1 ஸ்பூன் அளவு தயாரித்து வைத்துள்ள பொடியை சேர்த்து காய்ச்சி ஒரு டம்ளருக்கு வடிகட்டி குடிக்கவும்.
இந்த பானம் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.