உடலில் தேங்கி கிடக்கும் கெட்ட வாயுக்களை வெளியேற்றுவது எப்படி?
துரித உணவுகள், வறுத்த உணவுகள், செரிக்காத உணவுகள், உடல் பருமன் உள்ளிட்ட காரணங்களால் வாயு பிரச்சனை ஏற்படுகிறது.
உடல் ஆரோக்யத்திற்கு உகந்த பொருட்களை உணவாக எடுத்துக் கொள்ள வில்லை என்றால் இது போன்ற பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.
ஆசனவாய் வழியாக வாயுக்கள் வெளியேறுவது சாதாரண ஒன்று என்றாலும் பொது வெளிகளில் அவை தர்ம சங்கடமான சூழலை ஏற்படுத்தி விடும் ஒன்றாக இருக்கின்றது.
மானப் பிரச்சனையாக பார்க்கப்படும் இதை ஆரம்ப நிலையில் சரி செய்து கொள்வது மிகவும் நல்லது.
சாப்பிட்ட உடன் வயிறு உப்பசம் அடைதல், சாப்பிட்ட உடன் அடிக்கடி ஆசனவாயில் இருந்து வாயுக்கள் வெளியேறுதல், புளித்த ஏப்பம் அனைத்தும் உடலில் கெட்ட வாயுக்கள் தங்கி இருப்பதற்கான அறிகுறிகள் ஆகும்.
வாயுத் தொல்லைக்கு தீர்வு…
தேவையான பொருட்கள்:-
*பெருங்காயம்
*ஓமம்
செய்முறை…
பாத்திரத்தில் 1 கிளாஸ் அளவு நீர் ஊற்றி 1 ஸ்பூன் பெருங்காயத் தூள் மற்றும் 1 ஸ்பூன் ஓமம் சேர்த்து கொதிக்க விட்டு வடிகட்டி பருகினால் வாயுத் தொல்லை நீங்கும்.
தேவையான பொருட்கள்:-
*பப்பாளி
*ஓமம்
ஒரு கீற்று பப்பாளியை துண்டாக நறுக்கி அதில் ஓமம் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாயுத் தொல்லை நீங்கும்.