நுரையீரல் சளி: சட்டுனு கரைந்து வெளியேறி விடும் .. இவ்வாறு செய்தால்..!

0
223
#image_title

நுரையீரல் சளி: சட்டுனு கரைந்து வெளியேறி விடும் .. இவ்வாறு செய்தால்..!

நாம் சுவாசிக்க உதவும் நுரையீலில் சளி படிந்தால் மூச்சு விடுதலில் சிரமம் ஏற்படும். குளிர்ந்த பொருட்களை சாப்பிடுதல், காலநிலை மாற்றம் ஆகியவற்றால் ஏற்படும் சளியை கரைக்க வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி கசாயம் செய்து குடிக்கலாம்.

1)சுக்கு
2)கிராம்பு
3)தேன்
4)பட்டை
5)வெற்றிலை

சளி தொந்தரவை குணமாக்கும் கசாயம்…

1)அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 250 மில்லி தண்ணீர் ஊற்றவும்.

2)அடுத்து 3 கிராம்பு மற்றும் 2 பட்டை துண்டை அதில் சேர்க்கவும். அதிகம் சேர்க்க வேண்டாம். பட்டை காரத் தன்மை கொண்டது. எனவே 2 துண்டு போதுமானதாக இருக்கும்.

3)அடுத்து ஒரு துண்டு சுக்கை உரலில் போட்டு தட்டி கொதிக்கும் நீரில் சேர்க்கவும். சுக்கு இல்லாத பட்சத்தில் இஞ்சி துண்டு சேர்க்கலாம். இதையும் அதிகம் சேர்க்கக் கூடாது. ஒரு துண்டு போதுமானதாக இருக்கும்.

4)அடுத்து சளிக்கு உகந்த மூலிகையான வெற்றிலையை உரலில் போட்டு இடித்து நீரில் சேர்க்கவும். காம்பை நீக்கி விட்டு இடித்து சேர்க்கவும்.

5)இந்த பொருட்கள் அணைத்தும் கொதிக்கும் வரை அடுப்பை குறைவான தீயில் வைத்துக் கொள்ளவும்.

6)தண்ணீர் சற்று சுண்டி வந்ததும் அடுப்பை அணைத்து விட்டு ஒரு தட்டு கொண்டு அந்த பாத்திரத்தை மூடி வைக்கவும்.

7)சில நிமிடங்களுக்கு பின்னர் இந்த கசாயத்தை ஒரு டம்ளருக்கு வடிகட்டி சிறிது தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்து பருகவும். இவை நுரையீலில் உள்ள சளியை கரைத்து தள்ள பேருதவியாக இருக்கும்.

Previous articleஇந்த பொருட்கள் உங்கள் வீட்டில் இருந்தால் நிச்சயம் நீங்கள் செல்வந்தர்கள் ஆவீர்கள்..!
Next articleஇருதய அடைப்பிற்கு நிரந்தர தீர்வு இந்த பானம்..!