“புளி + கல் உப்பு”… இப்படி பயன்படுத்தினால் கால் பாத வீக்கம் ஒரே நாளில் சரியாகி விடும்!
கால் நம் உடலில் உள்ள முக்கிய உறுப்பு… கால் பாதத்தில் வலி, வீக்கம் ஏற்பட்டாலோ, அடி பட்டாலோ நடக்க மிகவும் சிரமமாக இருக்கும்.
காலில் வீக்கம் ஏற்பட்டால் அவை அதிக வலி கொடுக்கும். பாத வீக்கம் ஏற்பட நம் உடலில் சேரும் கழிவுகள் முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.
கால் பாத வீக்கத்தை குணமாக்க தீர்வு…
*புளி
*பூண்டு
*கல் உப்பு
*பச்சை கற்பூரம்
எலுமிச்சம் பழ அளவில் புளி எடுத்து தண்ணீரில் ஊறவைக்கவும். 15 நிமிடங்களுக்கு ஊறவிட்டால் போதுமானது…
பிறகு இதை கொதிக்க விட வேண்டும். அதற்கு முதலில் ஒரு இரும்பு வாணலி எடுத்துக் கொள்ளவும்.
அதில் ஊறவைத்துள்ள புளியை கரைத்து ஊற்றிக் கொள்ளவும். இதை அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.
பிறகு அதில் சிறிது கல் உப்பு சேர்த்து கலந்து விடவும். அடுத்து உரலில் 3 பல் தோல் நீக்கிய பூண்டு சேர்த்து இடித்து வைத்துக் கொள்ளவும்.
புளி + கல் உப்பு நன்கு கரைந்து சுண்டி வரும் வரை கொதிக்க விடவும். பிறகு இடித்த பூண்டை சேர்த்து கிளறவும்.
புளி கலவை சுண்டி வந்ததும் அடுப்பை அணைத்து விட்டு அதில் 1 துண்டு பச்சை கற்பூரம் சேர்த்து கரையும் வரை கிளறவும்.
பயன்படுத்தும் முறை….
புளி கலவை வெதுவெதுப்பான சூட்டிற்கு வந்ததும் அதை பாதத்தில் வீக்கம் உள்ள இடத்தில் தடவவும்.
ஒரு மணி நேரத்திற்கு பின்னர் பாதத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவிக் கொள்ளவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் பாத வீக்கம் வெகு விரைவில் சரியாகி விடும்.