குறட்டை பிரச்சனையை நிரந்தரமாக சரி செய்யும்… சிம்பிள் வீட்டு வைத்தியம்..!

0
191
#image_title

குறட்டை பிரச்சனையை நிரந்தரமாக சரி செய்யும்… சிம்பிள் வீட்டு வைத்தியம்..!

சளி, சுவாசப் பிரச்சனை இருப்பவர்கள் இரவு தூங்கும் பொழுது குறட்டை விடுவார்கள். இந்த குறட்டை சத்தத்தை சரி செய்ய வீட்டு வைத்தியத்தை முயற்சிக்கவும்.

*மஞ்சள்

*ஏலக்காய்

*தேன்

ஒரு கிளாஸ் அளவு தண்ணீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றிக் கொள்ளவும்.

பிறகு அதில் 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்க்கவும். சமையலுக்கு உபயோகிக்கும் மஞ்சள் தூள் தான் பயன்படுத்த வேண்டும்.

பிறகு 2 ஏலக்காயை உரலில் போட்டு தட்டி அதில் சேர்த்து 1/2 டம்ளர் தண்ணீராக வரும் வரும் வரை சுண்டக் காய்ச்சி கொள்ளவும்.

இதை ஒரு டம்ளருக்கு வடிகட்டி தேன் கலந்து குடித்து வந்தால் குறட்டை பிரச்சனை நீங்கும்.

*புதினா

*தண்ணீர்

ஒரு பாத்திரத்தில் 10 புதினா இலைகளை போட்டு 1 கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.

இதை அடுப்பில் வைத்து 5 முதல் 8 நிமிடங்களுக்கு காய்ச்சி வடிகட்டி குடிக்கவும். இவ்வாறு செய்தால் குறட்டை பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.

*கொத்தமல்லி விதை

*மிளகு

ஒரு பாத்திரத்தில் 1 ஸ்பூன் கொத்தமல்லி விதை, 4 மிளகு போட்டு 1 கிளாஸ் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். இதை ஒரு கிளாஸுக்கு வடிகட்டி குடித்தால் குறட்டை சத்தம் நீங்கும்.

Previous articleகொசு, விஷ பூச்சிகளின் கடியில் இருந்து தப்பிக்க இதை தோல் மீது பூசுங்கள்!
Next articleகண் பார்வையை 99% அதிகரிக்கும் இந்த பொடி பற்றி தெரியுமா?