மங்கு, தேமல், அரிப்பு, அலர்ஜி, படர்தாமரைக்கு தீர்வு தரும் குப்பைமேனி சோப்..!

0
366
#image_title

மங்கு, தேமல், அரிப்பு, அலர்ஜி, படர்தாமரைக்கு தீர்வு தரும் குப்பைமேனி சோப்..!

சருமத்தில் ஏற்படக் கூடிய அனைத்து வித பாதிப்புகளையும் குணமாக்க குப்பைமேனி சோப் பயன்படுத்துங்கள்.

தேவைப்படும் பொருட்கள்:-

1)குப்பைமேனி இலை
2)காஸ்ட்டிக் சோடா
3)தேங்காய் எண்ணெய்
4)வாசனை திரவியம்(விருப்பப்பட்டால்)

சோப் தயாரிக்கும் முறை….

*ஒரு கப் குப்பைமேனி இலையை சுத்தம் செய்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.

*இந்த குப்பைமேனி இலையை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மைய்ய அரைத்துக் கொள்ளவும்.

*இதை ஒரு கிண்ணத்திற்கு வடிகட்டி கொள்ளவும்.

*பிறகு ஒரு பிளாஸ்டிக் அல்லது கண்ணாடி கிண்ணத்தில் 1 கப் காஸ்ட்டிக் சோடா சேர்த்து 1 கப் தண்ணீர் ஊற்றி ஒரு கரண்டி கொண்டு கலந்து விடவும்.

*பிறகு அரைத்து வைத்துள்ள குப்பைமேனி சாறு 1 1/2 கப் அளவு சேர்த்து கலந்து விடவும்.

*அடுத்து 6 1/2 கப் அளவு சுத்தமான தேங்காய் எண்ணெய் ஊற்றி நன்கு கலக்கி விடவும்.

*பிறகு விருப்பப்பட்டால் வாசனை திரவியம் சிறிது சேர்த்து கலந்து கொள்ளலாம்.

*இதை அனைத்தையும் நன்கு கலந்த பிறகு ஒரு சோப் மோல்டில் ஊற்றி 8 மணி நேரத்திற்கு நிழலில் காய விடவும்.

*8 முதல் 10 மணி நேரத்திற்கு பிறகு குப்பைமேனி சோப் தயாராகி விடும். இதை சருமத்திற்கு பயன்படுத்தி வந்தால் தோல் தொடர்பான பாதிப்பு அனைத்தும் நீங்கி விடும்.

Previous article60 வயதிலும் 20 வயது நபரின் எனர்ஜி வேண்டுமா? அப்போ இதை தினமும் குடிங்க!
Next articleஇந்த பொடி உடலை இரு தினங்களில் வெள்ளையாக்கும்..!