பெண்களே விரைவில் கர்ப்பமாக இந்த ஒரு பொடியை பாலில் கலந்து குடிக்கவும்!
மோசமான உணவு முறையால் பெண்கள் பலருக்கு கருவுறுதலில் சிக்கல் ஏற்படுகிறது. சிலருக்கு கருப்பையில் கரு தங்கி சில தினங்களில் கலைந்து விடும். சிலருக்கு கரு தங்காமலே போய்விடும்.
இந்த பாதிப்புகளுக்கு இயற்கை முறையில் தீர்வு இதோ…
முருங்கை விதை – 100 கிராம்
கருப்பு உளுந்து – 50 கிராம்
வெந்தயம் – 25 கிராம்
கல்யாண முருங்கை இலை – 1 கைப்பிடி அளவு
ஒரு மாதத்திற்கு தேவையான அளவு செய்து வைத்துக் கொள்வது நல்லது. எவ்வளவு அளவில் இந்த பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளவும்.
முருங்கை விதை.. 100 கிராம் அளவிற்கு நாட்டு கடைகளில் வாங்கிக் கொள்ளவும்.
அடுத்து 50 கிராம் கருப்பு உளுந்து, 25 கிராம் வெந்தயம்.. மற்றும் 1 கைப்பிடி அளவு கல்யாண முருங்கை இலையை எடுத்துக் கொள்ளவும்.
இந்த பொருட்கள் அனைத்தையும் வெயிலில் காயவைத்து எடுத்து பயன்படுத்தவும்.
முருங்கை விதையை இடித்து அதிலுள்ள பருப்பை மட்டும் எடுத்துக் கொள்ளவும். ஒரு மிக்ஸி ஜாரில் முருங்கை விதை, கருப்பு உளுந்து, வெந்தயம் மற்றும் கல்யாண முருங்கை இலையை சேர்த்து நைஸ் பவுடராக்கி கொள்ளவும்.
இதை ஈரமில்லாத, காற்று புகாத டப்பாவில் போட்டு சேமித்துக் கொள்ளவும்.
பயன்படுத்தும் முறை..
ஒரு கிளாஸ் அளவு காய்ச்சிய பாலில் இந்த பொடி 1 ஸ்பூன் அளவு சேர்த்து கலந்து குடிக்க வேண்டும்.