சர்க்கரை: இந்த ஜென்மத்தில் வராமல் இருக்க “வெந்தயம் + கருஞ்சீரகம் “.. இப்படி பயன்படுத்துங்கள்!
இரத்த உறவுகள் மூலமாகவும், ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்கத்தாலும் ஏற்படக் கூடிய சர்க்கரை நோயால் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். உலகிலேயே இந்தியாவில் தான் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகம்.
உடலில் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக் கொண்டால் மட்டுமே சர்க்கரை நோய் பாதிப்பில் இருந்து நம்மை காத்துக் கொள்ள முடியும். இதை இயற்கை வைத்தியம் மூலம் செய்வது சிறப்பு.
தேவையான பொருட்கள்:
*வெந்தயம்
*கருஞ்சீரகம்
செய்முறை:
வெந்தயம் மற்றும் கருஞ்சீரகம் ஆகிய இரண்டையும் 250 கிராம் அளவு எடுத்து வெயிலில் உலர்தி காய வைத்துக் கொள்ளவும்.
பிறகு மிக்ஸியில் போட்டு பொடியாக்கி சேமிக்கவும். பொடி நைஸாக இருக்க வேண்டும். கொரகொரப்பாக இருந்தால் அதை சலித்து எடுத்துக் கொள்ளவும்.
பயனப்டுத்தும் முறை…
ஒரு கிளாஸ் அளவுள்ள நீரில் 1 ஸ்பூன் அளவு வெந்தயம் + கருஞ்சீரகம் பொடியை சேர்த்து காய்ச்சி குடிக்கவும். இவ்வாறு செய்வதன் மூலம் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.
மற்றொரு தீர்வு…
தேவையான பொருட்கள்..
*பாகற்காய்
*நாவல் விதை
ஒரு கப் பாகற்காய் துண்டுகள் மற்றும் ஒரு கப் நாவல் விதையை உலர்த்தி பொடியாக்கி கொள்ளவும். இந்த பொடியை 1 கிளாஸ் அளவு நீரில் போட்டு கொதிக்க வைத்து குடிக்கவும். இவ்வாறு தொடர்ந்து செய்வதன் மூலம் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.