உடல் உஷ்ணத்தை குறைக்க இந்த பானம் ஒருமுறை குடிங்கள் போதும்..!

உடல் உஷ்ணத்தை குறைக்க இந்த பானம் ஒருமுறை குடிங்கள் போதும்..!

உடலில் அதிகமான சூடு இருந்தால்.. அவை பித்தம், எரிச்சல் உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்தும். கண் எரிச்சல், சிறுநீர் கழிக்கும் பொழுது எரிச்சல்,வலி உணர்வு, தலைவலி, உடல் வலி ஆகியவற்றை உண்டாக்கும்.

உடலை அதிக உஷ்ணத்துடன் வைக்கக் கூடாது. உடலில் அதிகளவு உஷ்ணம் இருந்தால் ஆண்களுக்கு விந்தணு குறைபாடு, பெண்களுக்கு கரு தூங்குவதில் பிரச்சனை ஆகியவை ஏற்படும்.

உடல் சூட்டை தணிக்க இயற்கை வழிகள்…

*வெந்தயம்

ஒரு ஸ்பூன் வெந்தயத்தை தண்ணீரில் ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் உடல் குளிர்ச்சி அடையும்.

*மோர் + வெந்தயம்

மோரில் வெந்தயத்தை ஊறவைத்து குடித்து வந்தால் வயிறு எரிச்சல், உடல் உஷ்ணம் நீங்கும்.

*சின்ன வெங்காயம்

தினமும் ஒரு சின்ன வெங்காயம் சாப்பிட்டு வந்தால் உடல் சூடு குறையும்.

*கறிவேப்பிலை

ஒரு கொத்து கறிவேப்பிலை தண்ணீரில் ஊறவைத்து குடித்து வந்தால் உடல் சூடு, பித்தம் குறையும்.

*மருதாணி

இரு வாரங்களுக்கு ஒரு முறை கை, கால்களுக்கு மருதாணி வைத்து வந்தால் உடல் சூடு முழுமையாக நீங்கும்.

*துளசி

துளசி ஊறவைத்த நீரை அருந்தி வந்தால் உடல் சூடு குறையும்.

*ரோஜா இதழ்

ஒரு கிளாஸ் நீரில் ஒரு பன்னீர் ரோஜாவின் இதழை சேர்த்து ஊறவிட்டு ஒரு இரவு கழித்து குடித்து வந்தால் உடல் சூடு முழுமையாக குறையும்.