நெஞ்சு சளி: இதை செய்தால் நொடியில் கரைந்து வெளியேறும்..!

Photo of author

By Divya

நெஞ்சு சளி: இதை செய்தால் நொடியில் கரைந்து வெளியேறும்..!

நாள்பட்ட நெஞ்சு சளியை கரைத்து வெளியேற்ற கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை முயற்சிக்கவும்.

தீர்வு 01:-

1)துவரம் பருப்பு
2)மிளகு
3)உப்பு

1/4 கப் துவரம் பருப்பு, 1 ஸ்பூன் மிளகை ஒரு வாணலியில் போட்டு மிதமான தீயில் லேசாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

இதை நன்கு ஆறவிட்டு ஒரு மிக்ஸி போட்டு அரைத்து பொடியாக்கி கொள்ளவும். இந்த பொடியில் சிறிது உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

ஒரு கிண்ணத்தில் இந்த துவரம் பருப்பு பொடி 2 ஸ்பூன் அளவு சேர்க்கவும். அடுத்து 1 1/2 ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து நன்கு குழைத்து சாப்பிடவும். இவ்வாறு செய்தால் நெஞ்சில் தேங்கி கிடந்த சளி அனைத்தும் கரைந்து வெளியேறி விடும்.

தீர்வு 02:-

1)எலுமிச்சை சாறு
2)தேன்

ஒரு பாத்திரத்தில் பாதி எலுமிச்சம் பழத்தின் சாறை ஊற்றி 1 கிளாஸ் தண்ணீர் ஊற்றி 2 நிமிடங்களுக்கு சூடாக்கவும்.

பிறகு இதை ஒரு கிளாஸிற்கு ஊற்றி சிறிது தேன் கலந்து குடிக்கவும். இவ்வாறு செய்து வந்தால் மார்பில் தேங்கி கிடந்த சளி முழுவதும் கரைந்து வெளியேறி விடும்.

தீர்வு 03:-

1)பால்
2)மிளகு
3)தேன்

உரலில் 3 அல்லது 4 மிளகு போட்டு இடித்துக் கொள்ளவும். பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பால் ஊற்றி கொதிக்க விடவும்.

இந்த பாலை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி தேன் கலந்து குடித்து வந்தால் நெஞ்சில் படிந்து கிடக்கும் சளி அனைத்தும் கரைந்து வெளியேறி விடும்.