இந்த பழத்தை ஒருநாள் மட்டும் சாப்பிடுங்க! அப்புறம் உடல் எடை கடகடனு குறைவதை கண்டு நீங்களே ஆச்சர்யப்படுவீங்க!
துரித உணவுகளை உட்கொள்வதால் உடல் மளமளவென உயர்ந்து விடுகிறது. இந்த உடல் எடையை குறைக்க நீங்கள் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வி அடைந்து விட்டதா. கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை முயற்சித்து வந்தால் நிச்சயம் நல்ல பலன் விரைவில் கிடைக்கும்.
தேவையான பொருட்கள்:-
தர்பூசணி
லெமன் சாறு
உப்பு
இஞ்சி
தேன்
செய்முறை:-
நீர்ச்சத்து நிறைந்த தர்பூசணி பழம் உடல் எடையை குறைப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றது. இந்த தர்பூசணி பழம் ஒரு கீற்று எடுத்து அதன் தோல் மற்றும் விதையை நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
அதன் பின்னர் ஒரு துண்டு இஞ்சியை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
பாதி எலுமிச்சம் பழத்தின் சாற்றை பிழிந்து வைத்துக் கொள்ளவும். பிறகு ஒரு மிக்ஸி ஜார் எடுத்து நறுக்கி வைத்துள்ள இஞ்சி துண்டுகளை போட்டு அரைத்துக் கொள்ளவும். அடுத்து நறுக்கி வைத்துள்ள தர்பூசணி பழத்தை போட்டு மைய்ய அரைத்து எடுக்கவும்.
தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் ஊற்றி அரைக்கலாம். பிறகு இதை ஒரு கிளாஸுக்கு மாற்றி சிட்டிகை அளவு உப்பு மற்றும் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து காலை நேரத்தில் குடிக்கவும். இவ்வாறு வாரத்தில் மூன்று வேளை குடித்து வர உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரைந்து உடல் ஆரோக்கியமாக இருக்கும்.