வயிற்று பகுதியில் தேங்கி கிடக்கும் கெட்ட கேஸை சுலபமாக வெளியேற்றும் மந்திரப் பொடி இது!
துரித உணவு, எண்ணையில் வறுத்த பொரித்த உணவு உள்ளிட்ட ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்கத்தால் வயிற்று பகுதியில் கெட்ட வாயுக்கள் அதிகளவு தேங்கி விடுகிறது.
இதனால் முதுகு பிடிப்பு, வயிறு பிடிப்பு, வயிறு உப்பசம், மன அழுத்தம் போன்ற பாதிப்புகளை சந்திக்க நேரிடும். அதுமட்டும் இன்றி வாயு பிடிப்பால் மார்பு பகுதியில் ஒருவித அனத்தம் ஏற்படும்.
உண்ட உணவு செரிக்காமல் போவதினால் மலம் கழிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. இதனால் குடலில் அதிகளவு கெட்ட வாயுக்கள் தேங்கி பல வித பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
வயிற்று பகுதியில் தேங்கும் வாயுக்களை வெளியேற்ற உதவும் வீட்டு வைத்தியம்:
தேவையான பொருட்கள்:-
1)இஞ்சி
2)பூண்டு
3)ஓமம்
4)இந்துப்பு
செய்முறை:-
ஒரு துண்டு இஞ்சை தோல் நீக்கி உரலில் போட்டு இடித்துக் கொள்ளவும். அதேபோல் இரண்டு பல் பூண்டை தோல் நீக்கி உரலில் போட்டு இடித்துக் கொள்ளவும்.
அடுத்து அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றவும். அவை சூடானதும் இடித்த இஞ்சி, பூண்டு சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விடவும்.
அதன் பின்னர் 1/4 தேக்கரண்டி ஓமம் போட்டு கொதிக்க விட்டு ஒரு கிளாஸிற்கு வடிகட்டி இந்துப்பு போட்டு கலக்கி குடிக்கவும். இவ்வாறு செய்தால் குடலில் தேங்கி கிடந்த கெட்ட வாயுக்கள் அனைத்து வெளியேறி குடல் ஆரோக்கியமாக இருக்கும்.