பற்களில் படிந்து இருக்கும் பல நாள் மஞ்சள் கறை நொடியில் நீங்க இந்த பாட்டி வைத்தியம் தான் பெஸ்ட்!
பற்களை சரிவர துலக்காததால் ஏற்படும் மஞ்சள் கறை, சொத்தை நீங்க இந்த பாட்டி வைத்தியக் குறிப்புகள் தங்களுக்கு உதவும்.
1)தக்காளி
2)தூள் உப்பு
3)சோடா உப்பு
ஒரு துண்டு தக்காளியை சீவல் கொண்டு சீவி எடுத்துக் கொள்ளவும். அடுத்து அதில் 1/4 தேக்கரண்டி தூள் உப்பு மற்றும் 1/4 தேக்கரண்டி சோடா உப்பு சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும்.
இந்த பேஸ்டை ப்ரஷில் வைத்து பற்களை துலக்கி வந்தால் பற்களில் படிந்து கிடக்கும் மஞ்சள் கறை, அழுக்கு அனைத்தும் நீங்கிவிடும்.
1)பூண்டு பேஸ்ட்
2)நல்லெண்ணெய்
10 பூண்டு பல்லை தோல் நீக்கி அரைத்து பேஸ்டாக்கி கொள்ளவும். இந்த பேஸ்ட்டில் சிறிது நல்லெண்ணெய் சேர்த்து கலக்கி ப்ரஷில் வைத்து பற்களை துலக்கி வந்தால் பற்களில் படிந்து கிடக்கும் மஞ்சள் கறை, அழுக்கு அனைத்தும் நீங்கிவிடும்.
1)பேக்கிங் சோடா
2)எலுமிச்சை தோல்
ஒரு எலுமிச்சம் பழத்தின் சாறு பிழிந்து விட்டு அதன் தோலை மட்டும் எடுத்துக் கொள்ளவும். இந்த தோலில் சிறிது பேக்கிங் சோடா சேர்த்து பற்களில் தேய்த்தால் பல் கறை முழுமையாக நீங்கும்.
1)புளி
2)உப்பு
ஒரு துண்டு புளியில் சிறிது உப்பு சேர்த்து பற்களை தேய்த்தால் மஞ்சள் கறை, உணவுத் துகள்கள் அனைத்தும் நீங்கி பற்கள் பளிச்சிடும்.