மங்கு? இதை மறைய வைக்க இந்த பேஸ்டை பயன்படுத்துங்கள்!

0
105
#image_title

மங்கு? இதை மறைய வைக்க இந்த பேஸ்டை பயன்படுத்துங்கள்!

சருமத்தை முறையாக பராமரிக்க தவறினால் அழுக்கு சேர்ந்து மங்கு உருவாகும். இந்த மங்கு முழுமையாக குணமாக மூலிகை எண்ணெய் தயாரித்து அதன் மீது தடவவும்.

தேவையான பொருட்கள்:-

1)வேப்பம் பூ
2)வேப்ப இலை
3)கற்றாழை ஜெல்
4)துத்தி இலை
5)தேங்காய் எண்ணெய்

செய்முறை:-

முதலில் ஒரு கைப்படி அளவு வேப்பம் பூ மற்றும் வேப்ப இலை எடுத்துக் கொள்ளவும். அரை கைப்படி அளவு துத்தி இலை எடுத்துக் கொள்ளவும். வேப்பம் பூ, வேப்ப இலை, துத்தி இலையை காயவைத்து அரைத்து பொடியாக்கி கொள்ளவும். கிடைக்காதவர்கள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்க கூடிய பொடியை வாங்கி பயன்படுத்தலாம்.

அடுத்து அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கப் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடானதும் அரைத்த பொடியை சேர்த்து மிதமான தீயில் காய்ச்சவும். அடுத்து அதில் 1/4 கப் கற்றாழை துண்டுகள் சேர்த்து கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.

இந்த எண்ணெயை நன்கு ஆறவிட்டு ஒரு பாட்டிலில் ஊற்றி சேமித்துக் கொள்ளவும்.

பயன்படுத்தும் முறை:-

இந்த எண்ணெயை முகம் சருமத்தில் மங்கு உள்ள இடத்தில் பூசி மஜாஜ் செய்யவும். 1/2 மணி நேரம் கழித்து வெந்நீர் கொண்டு முகத்தை நன்கு கழுவிக் கொள்ளவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் மங்கு முழுமையாக குணமாகும்.