வாயில் உள்ள புண்ணை ஆற்ற உதவும் பாட்டி மருத்துவம்!
தீர்வு 01:-
*தேங்காய் எண்ணெய்
சிறிது தேங்காய் எண்ணையில் வாயில் கொப்பளம் உள்ள இடத்தில் தடவினால் அவை விரைவில் ஆறும்.
தீர்வு 02:-
*கிராம்பு எண்ணெய்
வாய்ப்புண்ணில் சிறிது கிராம்பு எண்ணெய் தடவினால் அவை எளிதில் ஆறும்.
தீர்வு 03:-
*தேன்
தேனை வாயில் புண் உள்ள இடத்தில் பூசினால் அவை விரைவில் ஆறி விடும்.
தீர்வு 04:-
*தேங்காய் பால்
உணவு உட்கொண்ட பின்னர் தேங்காய் பால் கொண்டு வாயை சுத்தம் செய்தால் வாய் பகுதியில் ஏற்பட்டுள்ள புண்கள் ஆறும்.
தீர்வு 05:-
*சோடா உப்பு
சிறிது சோடா உப்பை வாய்ப்புண் மீது பூசி வந்தால் அவை விரைவில் குணமாகும்.
தீர்வு 06:-
*தூள் உப்பு
வாயில் புண் உள்ள இடத்தில் சிறிது உப்பை தண்ணீரில் கலந்து பூசினால் அவை விரைவில் ஆறும்.
தீர்வு 07:-
*ஆரஞ்சு தோல்
சிறிது ஆரஞ்சு தோலை காயவைத்து அரைத்து பொடி செய்து கொள்ளவும். இந்த பொடியில் சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்து குழைத்து வாயில் புண் உள்ள இடத்தில் பூசினால் அவை எளிதில் ஆறிவிடும்.
தீர்வு 08:-
*டூத் பேஸ்ட்
பல் துலக்கும் பொழுது டூத் பேஸ்ட்டை வாய்ப்புண் மீது தடவினால் அவை சில தினங்களில் ஆறி விடும்.