கிட்னி ஸ்டோனை பனி போல் கரைத்து வெளியேற்ற இதை ஒரு கிளாஸ் குடிங்கள்!

Photo of author

By Divya

கிட்னி ஸ்டோனை பனி போல் கரைத்து வெளியேற்ற இதை ஒரு கிளாஸ் குடிங்கள்!

நம் உடல் சீரக இயங்க உதவும் கிட்னியில் (சிறுநீரகம்) தொற்று, கற்கள் உருவாகினால் அவை நம் தேக ஆரோக்கியத்தை பாதித்து விடும். இவ்வாறு ஏற்படும் பாதிப்பில் இருந்து தப்பித்துக் கொள்ள இயற்கை வைத்தியத்தை செய்து வரவும்

1)மூக்கிரட்டை கீரை
2)பீன்ஸ்

ஒரு கிண்ணத்தில் 1/4 கைப்பிடி அளவு மூக்கிரட்டை கீரை மற்றும் 3 பீன்ஸ்(நறுக்கியது) போட்டு தண்ணீர் ஊற்றி அலசிக் கொள்ளவும்.

அடுத்து ஒரு மிக்ஸி ஜார் எடுத்து அதில் சுத்தப்படுத்தி வைத்துள்ள மூக்கிரட்டை கீரை மற்றும் பீன்ஸை போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி மைய்ய அரைக்கவும்.

இதை ஒரு கிண்ணத்திற்கு வடிகட்டி கொள்ளவும். அடுத்து அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும். பிறகு அரைத்த சாற்றை சேர்த்து கொதிக்க விட்டு குடித்தால் கிட்னி ஸ்டோன் முழுமையாக கரைந்து சிறுநீர் வழியாக வந்து விடும்.

1)துளசி
2)தேன்

ஒரு கைப்படி அளவு துளசியை வெயிலில் போட்டு நன்கு உலர்த்திக் கொள்ளவும். பிறகு இதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடி செய்து கொள்ளவும்.

அடுத்து அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். பிறகு அரைத்த துளசி பொடி ஒரு தேக்கரண்டி சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விட்டு வடிகட்டவும்.

இதில் சிறிது தேன் கலந்து குடித்தால் கிட்னியில் உள்ள கற்கள் அனைத்தும் கரைந்து வெளியேறி விடும்.