1/2 மணி நேரத்தில் உடலில் உள்ள சளி அனைத்தும் கரைந்து வெளியேற வேண்டுமா? அப்போ இந்த மசாலா டீ செய்து குடிங்கள்!
அடிக்கடி சளி பிடிப்பதால் சிறு குழந்தைகள், பெரியவர்கள் என்று அனைவரும் கடும் அவதியடைகின்றனர். இந்த சளி பாதிப்பால் மூச்சு விடுதலில் சிரமம் ஏற்படும். எனவே சளி, இருமல் தொல்லையில் இருந்து விடுபட மசாலா டீ செய்து குடிங்கள்.
இஞ்சி, துளசி மேலும் சில பொருட்களை கொண்டு தயாரிக்கும் மசாலா டீ உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது.
மசாலா டீ செய்யத் தேவைப்படும் பொருட்கள்:-
1)இஞ்சி
2)பட்டை
3)இலவங்கம்
4)ஏலக்காய்
5)மிளகு
6)நாட்டு சர்க்கரை
7)டீ தூள்
8)பால்
9)துளசி
செய்முறை:-
அடுப்பில் ஒரு டீ போடும் பாத்திரம் வைத்து 1 கிளாஸ் தண்ணீர் ஊற்றவும். அடுத்து அதில் சிறு துண்டு பட்டை, ஒரு இலவங்கம், ஒரு ஏலக்காய், 2 இடித்த மிளகு, ஒரு துண்டு இடித்த இஞ்சி, 5 துளசி இலை மற்றும் 1/2 தேக்கரண்டி டீ தூள் சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விடவும்.
ஒரு கிளாஸ் தண்ணீர் 1/2 கிளாஸாக சுண்டி வந்ததும் 1 கிளாஸ் காய்ச்சாத பால் சேர்த்து கொதிக்க விடவும்.
டீ கொதிக்கும் தருணத்தில் சுவைக்காக சிறிது வெல்லம் சேர்த்து கொதிக்க விட்டு வடிகட்டி குடித்தால் உடலில் தேங்கி கிடந்த சளி முழுவதும் கரைந்து வெளியேறி விடும்.