ஆண்களுக்கு வரப்பிரசாதம் இந்த பால்! இதில் அப்படி என்ன ஸ்பெஷல் இருக்குனு தெரியுமா?
ஆண்களுக்கு இருக்கும் மலட்டு தன்மை, விந்தணு குறைபாட்டை சரி செய்ய 4 பொருட்கள் சேர்த்த பாலை அருந்துவது நல்லது.
1)முருங்கை பிசின்
2)முருங்கை பருப்பு
3)பால்
4)நிலக்கடலை
5)பேரிச்சம்பழம்
முருங்கை பிசின் மற்றும் பருப்பு 20 கிராமிற்கும், நிலக்கடலை 25 கிராம் மற்றும் பேரிச்சம் பழம் 5 என்ற எண்ணிக்கையிலும் எடுத்துக் கொள்ளவும்.
செய்முறை:-
முருங்கை பிசினை நீரில் போட்டு கழுவி நன்கு காயவைத்து எடுத்துக் கொள்ளவும். அதன் பின்னர் முருங்கை விதையில் உள்ள பருப்பை தனியாக பிரித்தெடுத்து மிதமான தீயில் வறுத்துக் கொள்ளவும்.
பச்சை நிலக்கடலை 25 கிராம் அளவு எடுத்துக் கொள்ளவும். இதை வாணலியில் போட்டு கருகிடாமல் வறுத்துக் கொள்ளவும்.
ஒரு மிக்ஸி ஜாரில் வறுத்த நிலக்கடலை, முருங்கை பிசின் மற்றும் முருங்கை பருப்பை போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
பிறகு பேரிச்சம் பழத்தை விதை நீக்கி மிக்ஸி ஜாரில் போட்டு அரைக்கவும்.
அடுத்து அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பால் ஊற்றி சூடாக்கவும். பிறகு அரைத்த பொடி மற்றும் அரைத்த பேரிச்சம் பழம் சேர்த்து கொதிக்க விட்டு காலை நேரத்தில் குடித்து வந்தால் கூடிய விரைவில் மலட்டு தன்மை, நரம்பு தளர்ச்சி, விந்து முந்துதல், விந்தணு குறைபாடு உள்ளிட்ட பாதிப்புகள் நீங்கும்.