வயிற்றில் படிந்து கிடக்கும் கொழுப்புகள் ஒரு வாரத்தில் உருகிவிடும் இந்த டீ குடித்து வந்தால்!
நம் உடலின் வயிற்று பகுதியில் தான் அதிகளவு கொழுப்பு தேங்குகிறது. இதனால் நாளடைவில் அவை தொப்பையாக உருவெடுத்து விடுகிறது. இந்த கொழுப்பை கரைக்க பல வித முயற்சிகள் எடுத்தும் ஒரு பயனும் இல்லை என்று வருந்துபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை பின்பற்றவும்.
தேவையான பொருட்கள்:-
1)புதினா
2)எலுமிச்சை சாறு
3)தேன்
செய்முறை:-
அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும். அதன் பின்னர் புதினா இலை 5 அல்லது 6 சேர்க்கவும். இவை மிதமான தீயில் கொதிக்க வேண்டும். பிறகு அடுப்பை அணைத்து விட்டு ஒரு கிளாஸிற்கு வடிகட்டி கொள்ளவும்.
அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு மற்றும் தேவையான அளவு தேன் கலந்து குடிக்கவும்.
இந்த பானம் உடலில் தேங்கி கிடக்கும் தேவையற்ற கொழுப்புகளை கரைத்து உடலை பிட்டாக்கும்.
தேவையான பொருட்கள்:-
1)புதினா
2)துளசி
3)தேன்
செய்முறை:-
அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் அளவு தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். அதன் பின்னர் 10 புதினா இலை மற்றும் 10 துளசி இலை சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விடவும்.
இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி தேன் கலந்து குடித்து வந்தால் உடல் எடை கட்டுக்குள் இருக்கும்.