கோடை வெயிலை தணிக்கும் கம்மங்கூழ்!! இதில் இவ்வளவு நன்மைகள் அடங்கி இருக்கா?
தற்பொழுது கோடை காலம் தொடங்கி விட்டது. காலையிலேயே வெயில் வாட்டி எடுக்க ஆரம்பித்து விட்டது. இதனால் உடலில் அதிகளவு சூடு உருவாகிறது. உடல் சூடானால் தலைவலி, வியர்க்குரு கொப்பளம், அம்மை, சூட்டு கொப்பளம் போன்றவை உருவாகும்.
எனவே உடல் சூட்டை தணிக்க கம்மங்கூழ் தயாரித்து குடிங்கள். கம்மங்கூழில் அதிகளவு இரும்பு, மெக்னீசியம், வைட்டமின்கள் உள்ளது.
கம்மங்கூழ் செய்ய தேவைப்படும் பொருட்கள்:-
கம்பு
உப்பு
மோர்
சின்ன வெங்காயம்(நறுக்கியது)
செய்முறை:-
1/4 கப் கம்பை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி 3 முதல் 4 முறை அலசிக் கொள்ளவும். பிறகு இதை வெயிலில் காயவைத்து மிக்ஸி ஜாரில் போட்டு கொரகொரப்பாக அரைக்கவும்.
அதன் பின்னர் சிறிது தண்ணீர் ஊற்றி மைய்ய அரைக்கவும். அடுத்து அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 1 லிட்டர் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.
பிறகு அதில் அரைத்த கம்பை ஊற்றி வேக விடவும். இதை கட்டி படாமல் கலந்து விடவும். கம்பு பச்சை வாடை நீங்கியதும் சிறிது உப்பு சேர்த்து கலந்து விடவும். பிறகு அடுப்பை அணைத்து விடவும்.
அடுத்து ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி தயாரித்து வைத்துள்ள கம்பை உருண்டைகளாக உருட்டி அதில் சேர்த்துக் கொள்ளவும்.
ஒரு நாள் கழித்து அந்த கம்பு உருண்டைகளை ஒரு பாத்திரத்தில் போட்டு 1/2 கப் மோர், 1/4 கப் நறுக்கிய வெங்காயம் சேர்த்து கலக்கி குடித்தால் உடல் சூடு காணாமல் போய்விடும்.