எடப்பாடி பழனிசாமி மற்றும் அண்ணாமலை மீது அவதூறு வழக்கு பதிவு செய்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

Photo of author

By Savitha

எடப்பாடி பழனிசாமி மற்றும் அண்ணாமலை மீது அவதூறு வழக்கு பதிவு செய்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான செய்திகளே பரவி வருகின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் போதைப் பொருள் கடத்தியதாக கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக் முன்னாள் திமுக உறுப்பினராக இருந்த நிலையில், போதைப்பொருள் கடத்தலில் கிடைத்த பணத்தை திமுகவிற்க்கு நிதியாக அளித்ததாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வந்தது.

இதற்கு கண்டனம் தெரிவித்தும் போதைப்பொருள் கடத்தலை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்தும் அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு திட்டங்களை நடத்தி வருகின்றனர்.

தமிழக ஆளுநர் ஆர். என்.ரவியிடம் புகார் மனு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், திமுக அரசை கண்டித்து எஸ் தளத்தில் வீடியோ வெளியிட்ட பாஜக தலைவர் அண்ணாமலை இருவரும் தன்னை பற்றி அவதூறு பரப்புவதாக ஸ்டாலின் கூறி வருகிறார்.

எனவே, போதைப் பொருள் விவகாரத்தில் தன்னை பற்றி அவதூறு பரப்பியதாக அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது வழக்கு பதிவு செய்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

கடந்த சில நாட்களாக போதைப்பொருள் விவகாரத்தில் தன்னை பற்றி அவதூறு செய்திகளை பரப்பி வருவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பில் சென்னை மாநகர குற்றவியல் வழக்கறிஞர் ஜி. தேவராஜ் தமிழக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.