கோடை வெயிலுக்கு இதை விட பெஸ்ட் ஜூஸ் இருக்கவே முடியாது!!
தற்பொழுது பங்குனி மாதம் தொடங்கி வெயில் சுட்டெரித்து வருகிறது.தாங்க முடியாத வெப்பத்தால் உடல் அதிகளவு சூடாகிறது.இந்த சூட்டை தணிக்க கிர்ணி பழத்தில் ஜூஸ் செய்து சாப்பிட்டு வருவது நல்லது.
கிர்ணி பழத்தில் வைட்டமின் ஏ,இ,சி சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.கிர்ணி பழம் கோடை காலத்தில் அறுவடைக்கு வரக் கூடிய பழ வகை ஆகும்.இந்த பழம் உடல் சூட்டிற்கு மட்டும் அல்ல உடல் பருமன்,நீரிழவு நோய்க்கு சிறந்த தீர்வாக இருக்கிறது.
அதுமட்டும் இன்றி சரும பிரச்சனை,வயிற்றுக் கோளாறை சரி செய்ய உதவுகிறது.கோடை காலத்தில் முகத்தில் வரக் கூடிய வியர்க்குரு கொப்பளத்தை குணக்கமாக கிர்ணி பழம் ஜூஸ் செய்து குடித்து வரலாம்.
தேவையான பொருட்கள்:-
1)கிர்ணி பழம்
2)சர்க்கரை
3)ஐஸ்கட்டி
செய்முறை:-
ஒரு கிர்ணி பழத்தை இரண்டாக நறுக்கி அதன் விதையை அப்புறப்படுத்தி விடவும்.பிறகு அதனுள் இருக்கும் சதை பற்றை மட்டும் எடுத்து மிக்ஸி ஜாரில் போடவும்.
அதன் பின்னர் அதில் சிறிது ஐஸ்கட்டி மற்றும் தண்ணீர் சேர்த்து ஒரு சுத்து விடவும்.இதனை தொடர்ந்து சுவைக்காக சர்க்கரை சேர்த்து மைய்ய அரைத்துக் கொள்ளவும்.இதை கிளாஸிற்கு ஊற்றி குடித்தால் உடல் சூடு நொடியில் பறந்து விடும்.