காலையில் இதை ஒரு கிளாஸ் குடித்தால் வறண்டு இறுகி போன மலம் வழுக்கி வந்து விடும்!! 100% அனுபவ உண்மை!!
நவீன உலகில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மலச்சிக்கல் பிரச்சனையால் பெரும் அவதியடைந்து வருகின்றனர்.மலக்குடல் பகுதியில் தேங்கி கிடக்கும் நாள்பட்ட மலக் கழிவுகளை சிரமம் இன்றி வெளியேற்ற இயற்கை வைத்தியத்தை ட்ரை பண்ணுங்கள்.
1)ஓமம்
2)விளக்கெண்ணெய்
3)எலுமிச்சை சாறு
4)கல் உப்பு
5)தண்ணீர்
செய்முறை:-
அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடு படுத்தவும்.பின்னர் அதில் 1/4 தேக்கரண்டி ஓமம்,1/4 தேக்கரண்டி கல் உப்பு 5 நிமிடங்களுக்கு மிதமான தீயில் கொதிக்க விடவும்.
பிறகு அடுப்பை அணைத்து இதை ஒரு கிளாஸுக்கு வடிகட்டி ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு மற்றும் கால் தேக்கரண்டி விளக்கெண்ணெய் சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் மலக் குடலில் தேங்கி கிடந்த மலக் கழிவுகள் அனைத்தும் வெளியேறி விடும்.
1)திரிபுலா பொடி
2)எலுமிச்சை சாறு
3)தண்ணீர்
அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் ஒரு ஸ்பூன் திரிபுலா பொடி சேர்த்து 2 நிமிடங்கள் கொதிக்க விட்டு ஒரு கிளாஸிற்கு ஊற்றி ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து குடித்தால் மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும்.