ஜாப் அலர்ட்: கிராம உதவியாளர் பணி! 2200+ காலிப்பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது!

0
193
#image_title

ஜாப் அலர்ட்: கிராம உதவியாளர் பணி! 2200+ காலிப்பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது!

தமிழக அரசு பணியான கிராம உதவியாளர் பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.மொத்தம் 2299 பணியிடங்களை நிரப்ப உள்ள நிலையில் 5 ஆம் வகுப்பு வரை படித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலை வகை: தமிழக அரசு வேலை

பதவி: கிராம உதவியாளர்

காலிப்பணியிடங்கள்: மொத்தம் 2299

பணியிடங்கள்: தமிழகம் முழுவதும்

கல்வி தகுதி:

கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பம் செய்ய இருக்கும் நபர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் 5 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.அதுமட்டும் இன்றி தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

மாத ஊதியம்: கிராம உதவியாளர் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.11,100 முதல் ரூ.35,100 வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை பதவி உயர்வு வழங்கப்படும்.

வயது வரம்பு: இப்பணிக்கு விண்ணப்பம் செய்யும் நபர்களுக்கு அதிகப்பட்ச வயது வரம்பு 32 என்று சொல்லப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

1)நேர்காணல்

2)எழுத்து தேர்வு

விண்ணப்பிக்கும் முறை:

www.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள வழிகாட்டுதலின் படி விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.