“ஏலக்காய் + எலுமிச்சை” இருந்தால் கோடை வெயிலை சமாளிக்கும் ட்ரிங்க் ஈஸியா தயாரிக்கலாம்!!

0
200
#image_title

“ஏலக்காய் + எலுமிச்சை” இருந்தால் கோடை வெயிலை சமாளிக்கும் ட்ரிங்க் ஈஸியா தயாரிக்கலாம்!!

கோடை காலம் தொடங்கி வெயில் வாட்டி எடுத்து வருகிறது.வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தால் உடல் சோர்வு,தலைவலி,மயக்கம்,உடல் உஷ்ணம் ஆகியவை ஏற்படும்.இதை சரி செய்ய எலுமிச்சை மற்றும் ஏலக்காய் சேர்த்த பானத்தை அருந்துவது நல்லது.

தேவையான பொருட்கள்:-

1)எலுமிச்சை சாறு
2)ஏலக்காய்
3)தேன்

செய்முறை:-

2 அல்லது 3 ஏலக்காய் எடுத்து அதனுள் உள்ள விதையை தனியாக பிரித்து எடுத்துக் கொள்ளவும்.இதை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடியாக்கி கொள்ளவும்.

பிறகு ஒரு எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி அதன் சாற்றை ஒரு கிளாஸிற்கு பிழிந்து கொள்ளவும்.பிறகு அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கலந்து கொள்ளவும்.

பின்னர் அதில் ஒரு தேக்கரண்டி ஏலக்காய் தூள் சேர்த்து கலந்து விடவும்.பிறகு தேவையான அளவு தேன் சேர்த்து நன்கு கலக்கி குடிக்கவும்.இந்த பானத்தை தொடர்ந்து குடித்து வந்தால் உடல் சூடு தணியும்.

எலுமிச்சை சாறு உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது.ஏலக்காய் தூள் வெயில் காலத்தில் ஏற்படும் மயக்கம்,தலைவலி,உடல் சோர்வு ஆகிவற்றை போக்குகிறது.

Previous articleKerala Recipe: கேரளா ஸ்பெஷல் பலாக்காய் 65 ரெசிபி!! சுவையாக செய்வது எப்படி?
Next articleவெங்காய எண்ணெய் தடவினால் முடி காடு மாதிரி வளரும்!! நம்புங்க அனுபவ உண்மை!!