100 வயது வரை உடலில் நோய் இன்றி வாழும் ரகசியம் தெரியுமா?
தற்போதைய காலகட்டத்தில் நோய் இன்றி வாழ்வது என்பது மிகவும் ஆச்சர்யமான ஒன்று.நீர்,காற்று,மண் என்று அனைத்தும் மாசு ஆகிவிட்டது.உயிர் வாழ்வதற்கு ஆகாரமான உணவு நஞ்சாகி விட்டது.
பிறந்த பச்சிளங் குழந்தைகளுக்கு தான் புதிய புதிய நோய்கள் உருவாகிறது.எதிலும் கலப்படம் ஆகிவிட்டதால் இனி ஆரோக்கியம் என்ற பேச்சு வெறும் பேச்சாகவே தான் இருக்கும்.
நம் முன்னோர்கள் நோய் நொடி இன்றி வாழ அவர்கள் பின்பற்றிய ஆரோக்கிய வழிகள் தான் காரணம்.
அன்றைய கால வாழ்க்கை முறை மனிதர்களை மனிதர்களாக வாழ வைத்தது.ஆனால் இன்றைய ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மனிதர்ளை நோயாளிகளாக மாற்றி வருகிறது.
80 வயதை கடப்பது என்பது சவலான ஒன்றாக இருக்கிறது.மனிதர்களை சோம்பேறிகளாக மாற்றி வாழ்க்கையை கஷ்டமாக்கி கொண்டிருக்கும் நவீன உலகில் ஆரோக்கியமாக வாழ சில எளிய வழிகளை பின்பற்றுவது நல்லது.
தினமும் யோகா,உடற் பயிற்சி செய்து வரவும்.மண் பானையில் நீர் ஊற்றி அருந்தவும்.வீட்டிலேயே நாட்டு காய்கறி,பழங்களை உற்பத்தி செய்து உணவாக சாப்பிடவும்.
மண்,இரும்பு,செம்பு பாத்திரங்களை உணவு சமைக்க சாப்பிட பயன்படுத்தவும்.பண்டைய கால வாழ்க்கை முறையை பின்பற்ற முயற்சிக்கவும்.வாழ்க்கையை அனுபவித்து வாழ முயற்சி செய்யவும்.தங்களுக்கு பிடித்ததை செய்து திருப்த்தி கொள்ளவும்.பணம்,சொத்து என்று வாழ்க்கையை தொலைக்காமல் வாழ்க்கையை அனுபவித்து வாழ கற்றுக் கொள்ளவும்.