உடலில் வீசும் கெட்டை வாடையை கட்டுப்படுத்த வேண்டுமா!! அப்போ இந்த வீட்டு வைத்திய குறிப்புகளை முயற்சி செய்யுங்கள்!!

0
263
#image_title

உடலில் வீசும் கெட்டை வாடையை கட்டுப்படுத்த வேண்டுமா!! அப்போ இந்த வீட்டு வைத்திய குறிப்புகளை முயற்சி செய்யுங்கள்!!

உடலில் அதிகளவு வியர்வை வெளியேறும் பொழுது ஒரு வித கெட்டை வாடை வெளியேறத் தொடங்கும்.இந்த வியர்வை நாற்றத்தை கட்டுப்படுத்த கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வைத்தியத்தை ட்ரை செய்து வரலாம்.

தீர்வு 01:-

1)சாமந்தி பூ
2)பன்னீர் ரோஜா இதழ்

ஒரு கைப்பிடி அளவு சாமந்தி பூ மற்றும் ஒரு கைப்பிடி அளவு பன்னீர் ரோஜா இதழை நன்கு உலர்த்தி பொடி செய்து கொள்ளவும்.

இதை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடியாக்கி வைத்துக் கொள்ளவும்.

இந்த பொடியை பன்னீரில் குழைத்து உடலில் பூசி குளித்து வந்தால் வியர்வை நாற்றம் கட்டுப்படும்.

தீர்வு 02:-

1)கடலை மாவு
2)கஸ்தூரி மஞ்சள் தூள்

ஒரு கிண்ணத்தில் 4 தேக்கரண்டி கடலை மாவு மற்றும் 2 தேக்கரண்டி கஸ்தூரி மஞ்சள் தூள் சேர்த்து தண்ணீர் ஊற்றி குழைத்துக் கொள்ளவும்.

இதை உடல் முழுவதும் பூசி குளித்து வந்தால் வியர்வை நாற்றம் கட்டுப்படும்.

தீர்வு 03:-

1)வேப்பம் பூ
2)வேப்பம் பட்டை

இந்த இரண்டையும் சம அளவு எடுத்து மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடியாக்கி கொள்ளவும்.

இந்த பொடியை உடலில் பூசி குளித்து வந்தால் உடலில் வீசும் கெட்ட வாடை கட்டுப்படும்.

தீர்வு 04:-

1)பச்சை பயறு
2)வெட்டி வேர்

ஒரு கப் பச்சை பயறு மற்றும் ஒரு கைப்பிடி அளவு வெட்டி வேரை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடியாக்கி கொள்ளவும்.

இந்த பொடியை உடலில் பூசி குளித்து வந்தால் உடலில் வீசும் கெட்ட வாடை கட்டுப்படும்.

Previous articleமுழங்கால் மூட்டு வலி ஒரே நாளில் குணமாக கம்பு இனிப்பு உருண்டை ஒன்று சாப்பிடுங்கள்!!
Next articleKerala Recipe: சுவையான பால் பாயாசம் கேரளா ஸ்டைலில் செய்வது எப்படி?