நெஞ்சு சளி வறட்டு இருமல் நுரையீரல் தொற்று குணமாக இதை ஒரு கிளாஸ் குடிங்க போதும்!!
நெஞ்சில் தேங்கி இருக்கும் சளி,வறட்டு இருமலால் கடுமையாக பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.
தொடர்ந்து இரும்பி கொண்டே இருந்தால் தொண்டையில் வலி ஏற்படும்.நெஞ்சு பகுதியில் அதிகளவு சளி கோர்த்து இருந்தால் சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும்.இந்த பாதிப்புகளில் இருந்து தப்பித்துக் கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வைத்தியத்தை கட்டாயம் பின்பற்றவும்.
தேவையான பொருட்கள்:-
1)கொய்யா இலை
2)கிராம்பு
3)இஞ்சி
4)தேன்
செய்முறை:-
முதலில் மூன்று கொய்யா இலையை தண்ணீரில் போட்டு அலசி சுத்தம் செய்து கொள்ளவும்.பிறகு இதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
அதன் பின்னர் ஒரு துண்டு இஞ்சை தோல் சீவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பின்னர் அதில் நறுக்கிய கொய்யா இலை,இஞ்சி துண்டு மற்றும் 3 கிராம்பு சேர்த்து மிதமான தீயில் 10 நிமிடங்களுக்கு கொதிக்க விடவும்.
பிறகு இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி தேன் கலந்து குடித்தால் நெஞ்சு சளி,வறட்டு இருமல்,நுரையீரல் தொற்று முழுமையாக குணமாகும்.