உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பெரிய ஆபத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸால் உலக நாடுகள் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். இதுமட்டும் இல்லாமல் விமான சேவைகள் உள்பட பல சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. சீனாவில் உள்ள வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதத்தில் இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. உலக அளவில் கொரோனா வைரஸ் தாக்குதலில் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2.20 கோடியைத் தாண்டியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பில் இருந்து ஒன்றரை கோடி பேர் நலமடைந்துள்ளனர். மேலும் இந்த தொற்றில் இறந்தவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்தை நெருங்கி வருகிறது.