வெள்ள பெருக்கால் ஏற்பட்ட சேதங்களை சரி செய்ய வேண்டும் ! மக்களின் கோரிக்கை !

0
66

கடந்த ஒரு மாத காலமாக கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் தென்மேற்கு பருவ மழை பெய்த காரணத்தால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி,கே.ஆர்.எஸ் உள்ளிட்ட அணைகள் நிரம்பி வழிந்தன. இதன் காரணமாக தமிழகத்தில் வினாடிக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் கன அடி உபரி நீர் திறந்து விடப்பட்டது.

இதனால் கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலுவை இந்நீர் வந்தடைந்தது.
இதன் காரணமாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளப்பெருக்கின் காரணமாக ஆர்ப்பரித்து வந்த தண்ணீரானது ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி, சீனி பால் உள்ளிட்ட இந்த அருவிகளில் கொட்டியது.

கடந்த ஒரு வாரமாக கர்நாடக மாநிலத்தில் மழை குறைந்த காரணத்தால் கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்தில் உள்ள காவிரி ஆற்றிற்கு விடப்படும் தண்ணீர் அளவு குறைக்கப்பட்டது.

இதனால் ஒகேனக்கல் அருவியில் நீர்வரத்து ஆனது 15000 கன அடியாக இரண்டு தினங்களுக்கு முன்பு குறைக்கப்பட்டது. ஏற்கனவே ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஒகேனக்கல் அருவியில் அரசு சார்ந்து அமைக்கப்பட்ட தடுப்பு கம்பிகள்,சுவர்கள் போன்ற பொருட்களுக்கு சேதம் ஏற்பட்டது.

கொரோனாவின் காரணத்தால் பார்வையாளர்கள் இல்லாத இந்த நேரத்தில் சேதமடைந்த அரசு சார்ந்த பொருட்களை சரி செய்து தருமாறு அப்பகுதியில் உள்ள மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.ஏனென்றால் குருநாதா பிரச்சினைகளும் தற்போது முடிவுக்கு வர உள்ள நிலையில் இன்னும் கொஞ்ச நாட்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளது.