இந்தியாவின் பாரம்பரிய மருத்துவ முறைகளுக்கான ஆயுஷ் அமைச்சகம் சார்பில் நடத்தப்பட்ட மருத்துவர்களுக்கான இணையவழி பயிற்சி முகாமில் இந்தியில் மட்டும் அயர்ச்சியை நடத்தியது குறித்து கேள்வி கேட்ட போது தாங்கள் அனுமதிக்கப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆயிஷ் அமைச்சகம் கடந்த ஆகஸ்ட் 18 ஆம் தேதி அன்று நடத்திய பயிற்சி முகாமில் தமிழகம்,கேரளா,ஆந்திரா உள்ளிட்ட தென் மாநிலங்களைச் சேர்ந்த இயற்கை மருத்துவத்தை 5 ஆண்டுகள் படிப்பு படித்த மருத்துவர்களும் பங்கேற்றனர். அதே நேரத்தில் வட மாநிலத்தைச் சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு மற்றும் டிப்ளமோ படிப்பு மட்டுமே முடித்த சிலரும் பங்கேற்றனர் . எனவே அவர்களுக்கு ஆங்கிலம் தெரியாது எனும் காரணத்தால் இந்தியில் வகுப்புகள் நடத்தியதாக தமிழக மருத்துவர்கள் பிபிசி தமிழிடம் தெரிவித்துள்ளனர்.
பயிற்சி முகாமில் பங்கு பெற்ற தமிழக மருத்துவரான சௌந்தரபாண்டியன் பயிற்சி குறித்து ஆங்கிலத்தில் கேள்வி எழுப்பிய போது அவரை ஆயுஷ் அமைச்சக செயலாளர் ஆணை வைத்யா ராஜேஷ் எழுதியதாக குற்றம்சாட்டியுள்ளார்.
“பயிற்சி முகாமில் முழுக்க முழுக்க இந்தியில் மட்டுமே நடத்தினார்கள். குறிப்பாக யோகா மட்டுமே பிரதானமாக இருந்தது. இயற்கை மருத்துவம் குறித்து பேச வேண்டும் என நான் ஆங்கிலத்தில் கேள்வி எழுப்பியபோது,வைத்யா ராஜேஷ் காட்டமாக பேசினார்.அவருக்கு ஆங்கிலம் சரளமாக பேச தெரியாது என்றும் அவர் கூறினார்.ஆனால் கேள்வி கேட்ட என்னை பற்றிய விவரங்களை சேகரித்து தமிழக அரசிடம் புகார் கொடுத்துள்ளதாகவும்” என்னை மிரட்டினார். இவ்வாறு பதில் அளிக்காமல் என்னை மிரட்டுவது சரியாகுமா,”என்கிறார் மருத்துவர் சௌந்தரபாண்டியன்.
பயிற்சியில் கலந்து கொண்ட மற்றொரு மருத்துவர் பிபிசி தமிழ் இடம் பேசியபோது,அடிப்படை ஆங்கிலம் கூட தெரியாத வடமாநில சுகாதார பணியாளர்கள் வகுப்பில் இருந்ததால்தான் இந்தியில் மட்டும் பயிற்சி நடைபெற்றது என்கிறார்.
“பயிற்சி தொடங்கியதும் ஆங்கிலத்தில் பேசாமல் இந்தியில் பேசினார்கள். நாங்களும் அது ஏதோ ஒரு தொடக்க உரையாக இருக்கும் என்று நம்பினோம். பிறகு அவர்கள் ஆங்கிலத்தில் பேசுவார்கள் என்று நினைத்தோம். ஆனால் அவர்கள் தொடர்ந்து இந்தியில் மட்டுமே பேசியதால் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் கேள்வி எழுப்பினோம். ஆனால் எங்கள் கேள்விகளை புறக்கணித்து இந்தியில் மட்டுமே வகுப்பு நடந்தது.தொடர்ந்து மூன்றாவது நாளும் நாங்கள் கேள்வி எழுப்பியதால் இந்தி புரியாதவர்கள் வெளியேறுங்கள் என்று ஆங்கிலத்தில் ஆயுத அமைச்சகத்தின் செயலாளர் அச்சுறுத்தும் வகையில் பேசினார்”,என்கிறார் இந்த மருத்துவர்.
இது குறித்து பல்வேறு அரசியல் பிரபலங்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு உள்ளனர்.
ஆன்லைன் வகுப்பில் மருத்துவரை மிரட்டியது மற்றும் இந்தி மொழியில் மட்டுமே பேசியது குறிப்பான ஊடகங்களில் வெளியாகின. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள வைத்யா ராஜேஷ் தற்போது வைரல் ஆகியுள்ளது காணொளி உண்மையான காணொளி இல்லை என்றும் அது மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.