சென்னை சேப்பாக்கத்தை பற்றி இப்படி கூறினாரா தோனி?

0
127

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மனித இனத்துக்கே பெரிய ஆபத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸால் உலக நாடுகள் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றன. தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால் இந்த வருடம் ஐபிஎல் தொடரை ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டது. இதனால் ஐபிஎல் போட்டியில் விளையாடுவதற்காக 8 அணிகளும் ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ளது.  சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் கூறுகையில் ஐபிஎல் தொடர் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டபோது, நான் சேப்பாக்கத்தில் முகாம் நடத்துவது குறித்து தயங்கினேன்.

ஏனென்றால், பயோ-பப்பிள் உருவாக்கப்படும் என்பதால். துபாய் செல்வதற்கு முன் ஐந்து நாள் முகாம் பயனுள்ளதாக இருக்குமா? என்று டோனியுடன் கேட்டேன். அவர் தன்னுடைய கருத்தில் மிகவும் உறுதியாக இருந்தார். டோனி என்னிடம், சார் நாம் நான்கு முதல் ஐந்து மாதங்கள் வரை கிரிக்கெட் விளையாடவில்லை. சென்னையில் அனைவரும் ஒன்றிணைவது அவசியம். சென்னையில் நாம் பயோ-பப்பிள் உருவாக்க வேண்டும். அப்போதுதான் துபாயில் தரையிறங்கும்போது நமக்கு அது பயனுள்ளதாக இருக்கும் என்று கூறினார்.

Previous articleசங்கட்டமான சூழ்நிலையில் சிக்கிய மும்பை, கொல்கத்தா அணி
Next articleஒரே நாளில் ஐம்பது ஆயிரம் பேர் பாதிக்கப்படும் சோகம் – பிரேசில்