ஒரே நாளில் ஐம்பது ஆயிரம் பேர் பாதிக்கப்படும் சோகம் – பிரேசில்

0
206
உலகம் முழுவதும் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி மனித இனத்துக்கே பெரிய ஆபத்தை ஏற்படுத்தி வருகிறது. உலக நாடுகள் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றன. சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியின் இறுதி கட்டத்தை விஞ்ஞானிகள் எட்டியுள்ளனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 34 ஆயிரத்தை கடந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, 2 கோடியே 46 லட்சத்து 5 ஆயிரத்து 238 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  பிரேசிலில் ஒரே நாளில் 48 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 38 லட்சத்தைக் கடந்துள்ளது. ஒரே நாளில் 860-க்கும் அதிகமானோர் பலியானதை தொடர்ந்து, அங்கு கொரோனா தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 1.19 லட்சத்தை தாண்டியுள்ளது.
Previous articleசென்னை சேப்பாக்கத்தை பற்றி இப்படி கூறினாரா தோனி?
Next articleமேலும் ஒரு தடுப்பூசி இந்தியாவால் உருவாக்கப்படுமா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here